திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்த தவறு! வெளியானது பின்னணி!
By : Sushmitha
சென்னை மாநகரை கடந்த வாரம் மிக்ஜம் புயலால் பெய்த கன மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, புயல் கரையை கடந்தும் மழை நின்ற பிறகும் சென்னையின் சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பது தமிழக அரசுக்கு பின்னடைவைவும் விமர்சனத்தையும் பெற்று தந்தது இதனால் இதனை சமாளிக்க திமுக ஒரு சாதுர்யமான அறிக்கையை வெளியிட்டு 2025ல் பெய்த மழையை விட 2023ல் பெய்த மழையின் அளவு அதிகம் என்றும் இதனால் தான் மீட்பு நடவடிக்கைகளுக்கு தாமதம் ஏற்பட்டது என்ற வகையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 2023 பெய்த மழையின் அளவைவிட 2015ல் பெய்த மழையின் அளவு தான் அதிகம் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையை தரவுகளுடன் வெளியிட்டு திமுக அரசாங்கம் கையாண்ட தகவல் தொழில்நுட்ப தரப்பில் உள்ள தவறை சுட்டிக்காட்டியது.
அதாவது 2015 மற்றும் 2023 மழைப்பொழிவை நியாயமான முறையில் ஒப்பிட்டுப் பார்க்க, சம இடைவெளிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். இருப்பினும், 2023 இல் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது என்று சித்தரிக்கும் முயற்சியில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 2023 க்கு நீண்ட இடைவெளியையும் 2015 மழைக்கு குறுகிய இடைவெளியையும் தேர்வு செய்தது. அதிமுக ஆட்சியின் போது, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரையிலான இடைவெளியைத் தேர்ந்தெடுத்தது, அந்த நேரத்தில் சுமார் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாறாக, திமுக ஆட்சியின் போது அதிக மழை பெய்ததை சித்தரிக்க, அதே காலகட்டத்தில் 450 மிமீ மழை பெய்ததைக் காரணம் காட்டி, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரை இடைவெளியை நீட்டித்தனர். 2015 மற்றும் 2023 இல் பெய்த மழைக்கு இடையே சரியான ஒப்பீடு சம இடைவெளிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஆனால் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 2023 இல் மழை பொழிவு அதிகமாக இருந்துள்ளது என்பதை வலியுறுத்தும் தவறான முயற்சிகளில் இறங்கியது!
Source : The Commune