திரௌபதி சாபம் சும்மா விடுமா...? பொன்முடியை சுற்றியடித்த கர்மா.....
By : Mohan Raj
திரௌபதி அம்மன் கோவில் விவகாரத்தால் வந்த வினை! தலைகீழாக மாறிய பொன்முடியின் நிலை!
1996 - 2001 இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்து திமுக. அப்பொழுது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து குவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கானது வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொழுது அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து உத்தரவளித்தது. அதற்குப் பிறகு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விசாரணைக்கு எடுத்து வந்தார். மேலும் அமைச்சர் பொன்முடி மற்றும் இந்த வழக்கை பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறையும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதற்குப் பிறகு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால் நீதிபதி எம் ஜெயச்சந்திரன் அவருக்கு பதிலாக இந்த வழக்கை விசாரித்தார். அந்த விசாரணையில் வருமான வரி கணக்குகள் சொத்து மற்றும் வங்கி கணக்குகளின் விவரங்கள் போன்ற 39 சாட்சிகளையும் அந்த சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணை ஆதாரங்களையும் முன்வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதேபோன்று அமைச்சர் பொன்முடி தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை அமைச்சர் பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கெட்டு உள்ளது என்றும் அவருடைய மனைவிக்கு தனியாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் அதன் மூலமாகவே பொன்மொழியின் மனைவி விசாலாட்சிக்கு வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்தார். இப்படி இரு தரப்பின் வாதங்களையும் அன்றைய தினத்தில் நீதிபதி கேட்டுக்கொண்டு நவம்பர் 27ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி விடுதலையான வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்த விசாரணையில் வேலூர் முதன்மை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும் இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 ஆம் தேதி என்று அறிவிக்கப்படும் என்றும் அதனால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும், 64.90% பொன் முடியும் அவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது என்று நீதிபதி எம். ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறிய தகவல் வைரலாகிறது, அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் பதிவில், 'நீங்கள் மேல்பாதி திரௌபதி க்கு போட்ட பூட்டு ஆறே மாதத்தில் உங்களை உள்ளே தள்ள வைத்தது இந்த கர்மா..திரௌபதியை வைத்து அரசியல் செய்த அரசியல்வாதிகள் அழிந்தது தான் பாரத மண்ணின் வரலாறு! இது ட்ரெய்லர் தான் துயரங்களுக்கு பிற திமுகவினரும் தயாராகுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது, விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிக்க மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு தரப்பில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு பூட்டு போடப்பட்டது. இந்த நிகழ்வைத்தான் தற்பொழுது அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. பொன்முடிக்கு சிறை தண்டனை கிடைத்ததையும் திரௌபதி கோவில் விவகாரத்தையும் சேர்த்து தற்போது இணையங்களில் வலதுசாரிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.