மத்திய அரசின் மீது பழி போடும் தி.மு.க.. அண்ணாமலை குற்றச்சாட்டு..
By : Bharathi Latha
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியின் போது, மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதில் தான் தற்போது இருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். குறிப்பாக தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசு குற்றம் சுமத்துவதிலேயே தற்போது இருக்கும் திமுக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் இப்ப இந்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் சொல்ல முடியாத பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால் வெள்ள நிவாரண பணிகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு அக்கறை இல்லை.
அவ்வாறு இருந்திருந்தால் வெள்ள நிவாரண பணிகளில் கவனம் செலுத்தி இருப்பார்கள். அதை விடுத்து உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசின் நடவடிக்கைகளில் மோதல் போக்கை கடைபிடித்து இருக்க மாட்டார். வெள்ள நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளாமல் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதில் திமுக அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை தமிழக அரசு முறையாகவும் சரியாகவும் செய்யாத காரணத்தினாலே, மத்திய அரசு அந்த பணிகளை பொறுப்பெடுத்து செய்து இருக்கிறது.
வெள்ள நிவாரண நிதியாக சென்னை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு முதல் தவணியாக 450 கோடியும் இரண்டாவது தவணையாக 550 கோடியும் தமிழக அரசுக்கு அளித்துள்ளது. மேலும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின் தான், அதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கும். அதற்குள்ளையே வெள்ள பாதிப்புக்கு தாங்கள் கேட்டு நிதியை விட குறைவாக தான் மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது என்று குற்றச்சாட்டு வருகிறார்கள்.
Input & Image courtesy:News