Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்த அடி! கதறலை தொடங்கிய அமைச்சர் சேகர்பாபு....!

தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்த அடி! கதறலை தொடங்கிய அமைச்சர் சேகர்பாபு....!

SushmithaBy : Sushmitha

  |  26 Dec 2023 1:26 AM GMT

கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. இந்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, பல குளங்கள் ஏரிகள் நீர் நிறைந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து தீவுகளானது.


மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாலைகள் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர், இப்படி கடும் மழையை தென் தமிழக மாவட்டங்கள் சந்தித்தது, இருப்பினும் அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை பெய்யும் மழையை போன்ற நிகழ்வு தற்போது நிகழ்ந்துள்ளதாக தூத்துக்குடி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அது மட்டும் இன்றி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் திருச்செந்தூரில் 69 சென்டிமீட்டர் மழையும் ஸ்ரீவைகுண்டத்தில் 62 சென்டிமீட்டரும் மூளைக்கரைப்பட்டியில் 61 சென்டிமீட்டர் மற்றும் கோவில்பட்டியில் 53 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


ஒரு வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழையானது இந்த ஒரே நாளில் தூத்துக்குடியில் பெய்துள்ளதாகவும் கூறப்பட்டது. அதோடு தூத்துக்குடி மாவட்டம் கோரபள்ள குளம் திரும்பியது அதனால் குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டு மொத்த தண்ணீரும் நகர் பகுதிக்குள் நுழைந்து வெள்ளப்பெருக்காக ஓடியது. மேலும் இக்குளத்தின் உடைப்பால் ஆத்திமரபட்டி, ஸ்பிக் நகர், முத்தையாபுரம் மற்றும் வீர நாயக்கன் தட்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட சென்ற புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இங்கிருக்கும் திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறி உள்ளது என்றும் பதினெட்டாம் தேதி மக்கள் இங்கே பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டுமா இல்லையேல் மக்களுடன் முதல்வர் என கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.


அதனைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பிறகும் மக்களை சந்திக்காமல் கூட்டணி கட்சிக்காக டெல்லி சென்று பிரதமரை பார்ப்பதற்காக தான் டெல்லி சென்றேன் என்று முதல்வர் கூறுகிறார். பிரதமரை பார்க்க சென்றால் கூட்டணி கட்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் பார்க்க சென்றீர்கள் பங்கேற்றீர்கள் தானே! என்றும் மழை பாதிப்பை மாநில அரசு நிச்சயமாக கையாளுவதில் தோல்வியை சந்தித்துள்ளது, அதோடு முதல்வரே உங்களிடம் இன்னொன்றும் கூறுகிறேன் சென்னை மழை வெள்ளத்தில் பாதித்து சென்னை மக்கள் எப்படி மீட்டெடுத்தோமோ அதே போல தென்பகுதி மக்களையும் மீட்டெடுப்போம் நீங்கள் சென்னையை மீட்டெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு, புதுவை ஆளுநர் ஆளுநராக நடந்து கொள்ள வேண்டும் பாஜக செய்தி தொடர்பாளர் போல் பேசியுள்ளார் என செய்தியாளர்கள் மத்தியில் விமர்சித்தார். மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி பகுதியில் சார்ந்தவர் அப்பகுதியில் நிவாரண பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறவில்லை என்பதை அவரே தெரிவித்தது மக்கள் மத்தியில் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் சேகர்பாபு, தமிழிசை சௌந்தர்ராஜன் தன் கருத்தை முன்வைத்த உடனே அடுத்த ஒரு மணி நேரத்தில் மறுப்பு செய்தியை கொடுத்துள்ளார் இவரைத் தொடர்ந்து திமுகவின் பலரும் மறுப்பு செய்தியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News