Kathir News
Begin typing your search above and press return to search.

திக்கு முக்காடி களித்து கொண்டிருப்பவர்களின் ஆணவ சாம்ராஜ்யம் சரியும்! புதுவை துணை நிலை ஆளுநர் கண்டனம்!

திக்கு முக்காடி களித்து கொண்டிருப்பவர்களின் ஆணவ சாம்ராஜ்யம் சரியும்! புதுவை துணை நிலை ஆளுநர் கண்டனம்!
X

SushmithaBy : Sushmitha

  |  27 Dec 2023 8:34 PM IST

கடந்த வாரங்களில் தூத்துக்குடி மாவட்டம் மழையால் கண்ட பாதிப்பு என்பது மற்ற மாவட்டங்களை விட அதிகம் என்றும் தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இரண்டு வருடங்களாவது ஆகும் என்றும் கூறப்பட்ட நிலையில் புதுவை துணை நிலை ஆளுநர் தூத்துக்குடி பகுதியில் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார் அப்பொழுது அப்பகுதியில் உள்ள மக்கள் படும் துயரங்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்த கருத்திற்கு மறைமுகமாக சமுக வலைதளங்களில் திமுகவினர் தன்னை காயப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில், தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...திண்டாடும் மாடலை வைத்து....திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது...சரியப்போகிறது...இது சபதம்! அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்...ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...

(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்....சமூகத்திலும் காயப்படுத்துங்கள்..... அந்த ரத்தத்தில் தோய்த்து....நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்.....இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம்! என தெரிவித்துள்ளார்.

Source : Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News