முன்னெச்சரிக்கை அமைப்பு முறை அவசியம் வேண்டும்.. தமிழக அரசுக்கு வலியுறுத்தி மத்திய அமைச்சர்..
By : Bharathi Latha
எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ள சம்பவங்கள் நிகழ்ந்தால் அனைத்து அதிகாரிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் எடுத்துள்ள மீட்பு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர்கள், நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் சிஎம்டிகள், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன தலைவர் - நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, நீர் நிலைகளில் உடைப்புகள் அல்லது கொள்ளளவை மீறி நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களில் ஒரு வலுவான முன் எச்சரிக்கை அமைப்பு முறையை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கண்டறிந்து இத்தகைய அபாயங்கள் குறித்து எச்சரிப்பதில் இந்த அமைப்பு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளில் சொத்துக்களுக்கு ஏற்படக் கூடிய சேதம் மற்றும் உயிர் இழப்பு ஆகியவற்றைத் தடுக்கவோ அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கவோ முடியும் என்று அமைச்சர் கூறினார். மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ரிசர்வ் வங்கியின் வழி காட்டுதல்களின்படி மாநில அரசின் அதிகாரிகள் இயற்கை பேரிடரை அறிவிப்பதில் நடவடிக்கை எடுத்தவுடன், வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்.எல்.பி.சி செயல்முறை மூலம் முன்முயற்சிகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. நிதியமைச்சர் அறிவுறுத்தினார்.
Input & Image courtesy:News