Kathir News
Begin typing your search above and press return to search.

கேப்டன் உயிருடன் இருக்கும் பொழுது அவரை குறிவைத்து தாக்கிய மீடியாக்கள்.... வெளிவந்த பகீர் தகவல்....!

கேப்டன் உயிருடன் இருக்கும் பொழுது அவரை குறிவைத்து தாக்கிய மீடியாக்கள்.... வெளிவந்த பகீர் தகவல்....!

SushmithaBy : Sushmitha

  |  28 Dec 2023 12:02 PM GMT



கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சைகள் இருந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று காலையில் இயற்கை எய்தார். முன்னதாக கடந்த மாதம் விஜயகாந்திற்கு இருமல் சளி அதிகமாக உள்ளதால் அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டதால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் கூட மியாட் மருத்துவமனையில் இருந்து கேப்டனின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் கேப்டனை காண்பதற்காக மருத்துவமனையில் கூடினர் பல திரை உலக பிரபலங்களும் விஜயகாந்தை காண்பதற்காக மருத்துவமனைக்கு சென்றனர். விஜயகாந்த் விரைவில் உடல் நலம் தேறி வரவேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்களும் கட்சி நிர்வாகிகள் என பலர் பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்ய ஆரம்பித்தனர்.


இந்த பரபரப்பு தகவல்களால் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளம் முழுவதும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த பதிவுகள் அதிகமாக பதியப்பட்டு வைரலானது! அந்த நிலையில் கேப்டனின் உடல்நிலை குறித்து சில வதந்திகள் பரவுவதாக அவரது மனைவி பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்புவார் என்று தெரிவித்திருந்தார்.



இதனை அடுத்து கடந்த 11ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார் அதோடு தேமுதிக கட்சி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். பொதுக்கூட்டத்தில் தனது கேப்டனை மீண்டும் பார்த்த கட்சி நிர்வாகிகளும் அவரது ரசிகர்களும் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதற்கு அடுத்தபடியாகவே விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மீண்டும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


ஆனால் இந்த முறை அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை, இதனால் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு சென்னைக்கு வந்த விஜயகாந்த் நடிப்பில் புகழின் உச்சத்தையும் அதற்குப் பிறகு அரசியலிலும் பல முயற்சிகளையும் சிரமங்களையும் தாண்டி ஒரு இடத்தையும் பிடித்த கேப்டனின் மறைவு பலரின் மனதையும் கலங்க வைத்துள்ளது.


இதனால் சமூக வலைதள பக்கமே விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி செய்திகளும் அதற்கு இரங்கல் தெரிவிக்கும் செய்திகளும் குவிந்துள்ளது அந்த வரிசையில் விஜயகாந்த் உயிருடன் இருக்கும் பொழுது அவருக்கு ஏற்படும் கோபத்தையும் இயல்பாக அனைத்து மனிதர்களாலும் செய்யப்படும் குணங்களை தவறாக பயன்படுத்தி விஜயகாந்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல் மக்கள் மத்தியில் விஜயகாந்தை காமெடியாக திரிக்க முயற்சித்தது! இது தவிர 2011 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை கிண்டல் செய்வதற்காகவே காமெடி நடிகர் வடிவேலுவை களத்தில் இறக்கியது திமுக!


இப்படி திமுகவும், பத்திரிகையாளர்களும் இணைந்து விஜயகாந்தை தாக்கி பேசியது குறித்து யூட்யூபர் மாரிதாஸ் தனது எக்ஸ்பிரஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படி விஜயகாந்தின் மறைவிற்கு முக்கிய காரணமாக இருந்த ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News