Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயகாந்தை சுற்றிய சூழ்ச்சி, அவருடன் பயணித்த பத்திரிக்கையாளர் கூறிய உண்மை!

விஜயகாந்தை சுற்றிய சூழ்ச்சி, அவருடன் பயணித்த பத்திரிக்கையாளர் கூறிய உண்மை!
X

SushmithaBy : Sushmitha

  |  30 Dec 2023 1:05 AM GMT

சினிமா துறையில் புகழின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த் அரசியலில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று இறங்கிய சில வருடங்களிலேயே தொடர் சரிவையும் அதைத்தொடர்ந்தே தனது உடல் நல பாதிப்பையும் பெற்று கடந்த சில வருடங்களாகவே கட்சி நடவடிக்கைகளுக்கும் எந்த ஒரு பொது விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையிலே கடந்த நவம்பர் 18ஆம் தேதி விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது, இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற பொதுச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக மீண்டும் அவரது உடல்நிலை மோசமாகி நேற்று காலையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இதனால் திரையுலகமும் ஏன் ஒட்டுமொத்த தமிழகமே ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது, சமூக வலைதளங்கள் முழுவதும் விஜயகாந்தின் புகைப்படங்களும் அவர் உயிருடன் இருக்கும் பொழுது பேசிய பேச்சுக்கள் என பல கேப்டனின் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.


எந்த ஒரு நம்பரும் நம் அருகில் இருந்தால் அவருடைய அருமை தெரியாது விலகி இருந்தால் மட்டுமே அவரது அருமையும் அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் எத்தனை நன்மைகளை செய்தவர்கள் என்பது புரியும் என்று கூறுவார்கள் அந்த வகையில் கேட்பவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிய கேப்டன் விஜயகாந்த் நேற்று உலகத்தை விட்டு பிரிந்த பிறகு அவர் என்ன நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தார் சினிமா துறையில் இருக்கும் பொழுது என்னென்ன உதவிகளை செய்துள்ளார் என்ற ஒவ்வொரு தகவல்களும் வெளியாகி வருகிறது.


இந்த வரிசையில், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போது நடந்த நிகழ்வுகள் பற்றிய உண்மைகள் தற்பொழுது வெளியில் வந்துள்ளது. அதாவது கேப்டன் தொலைக்காட்சியில் எட்டு வருடங்களாக பணியாற்றிய பத்திரிக்கையாளர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் இணையதளத்தில் ஒரு நீண்ட பதிவு ஒன்றை முன் வைத்துள்ளார்.


அந்த பதிவில் அவர் விஜயகாந்த் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட சமயத்தில் நடந்த சில சம்பவங்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கேப்டன் விஜயகாந்த் அவர்களை சுற்றி நடந்த சில உண்மைகளை இந்த தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும். கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளராக 8 ஆண்டுகள் அவருடன் பயணித்தபோது நடந்தவை இவை..என குறிப்பிட்டு 2012 - சட்டசபையில் நடந்த நிகழ்வை திட்டமிட்டு சில காட்சிகளை மட்டும் சூழ்ச்சி செய்து வெளியிடப்பட்டது, 2013 - தன்னை எதிர்த்தார் என்ற காரணத்தினாலும் , அவர் வளர்ந்து விட கூடாது என்ற காரணத்தினாலும் பல MLA-க்கள் விலைக்கு வாங்கபட்டனர், சிலர் சுய லாபத்திற்கு சென்றவர்கள், உண்மையான அதிருப்தி காரணமாக கட்சி மாறியவர்கள் 2 பேர் மட்டுமே, 2015 - தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களை கொண்டு அவரை தூண்டிவிடும் படி கேள்விகளை கேட்டு மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியது , உதாரனமாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் பிரதமரை சந்தித்த பிறகு ஒரு தொலைக்காட்சி நிருபரால் எழுப்பப்பட்ட கேள்வி விஜயகாந்த்தை கோபப்படுத்தியது, 2016 - மக்கள் நல கூட்டணி என்னால் அடித்து சொல்ல முடியும் இந்த படத்தில் உள்ள 'ஒருவரால்' ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும், மற்றொரு முக்கிய கட்சி ஆட்சி அமைக்க கூடாது என்று நேர்த்தியாக சதி செய்து உருவாக்கிய கூட்டணி.


ஆனால் கேப்டன் கூட்டணியை முழுமையாக நம்பினார், 2012-ல் தொடங்கப்பட்ட Captain News 24x7 செய்தி தொலைக்காட்சியை அன்றைய ஆளுங்கட்சி திட்டமிட்டு முடக்கி, அரசு கேபிளில் ஒளிபரப்ப முட்டுக்கட்டை போட்டு எதிர்கட்சி, எதிர்கருத்தே இருக்க கூடாது என்று எடுத்த நடவடிக்கை! என்று முழு உண்மைகளையும் பதிவிட்டுள்ளார். அரசியலில் படு சுறுசுறுப்பாக விஜயகாந்த் செயல்படும் பொழுது அவரை வீழ்த்த சூழ்ந்திருந்த சூழ்ச்சிகள் ஏராளம் என பதிவுகளும் இணையதளங்களில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News