Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதிய நியாய சன்ஹிதா.... அலறியடித்து செய்யப்படும் திடீர் அரசியல்.....!

பாரதிய நியாய சன்ஹிதா.... அலறியடித்து செய்யப்படும் திடீர்  அரசியல்.....!
X

SushmithaBy : Sushmitha

  |  3 Jan 2024 3:41 PM GMT

புதுசா கொண்டு வந்த திட்டம் என்ன சொல்லுது தெரியுமா!


சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா மற்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா என்ற மூன்று புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் இந்த சட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்கினார். இது குறித்த தகவல்கள் வெளியாகும் பொழுது பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு மாறாக இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மிக முக்கியமாக வாகன விபத்து தொடர்பான திருத்தச் சட்டமும் இதில இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு பகுதியில் சாலை விபத்து ஏற்படும்பொழுது அதற்கு காரணமாக இருக்கும் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றால் அவர்மீது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பாக ஹிட் அண்ட் ரன்னில் மூன்று ஆண்டுகள் இருந்த இந்த தண்டனை தற்பொழுது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு நாடு முழுவதும் உள்ள லாரி, ட்ரக், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் தரப்பில், எந்த ஒரு ஓட்டுனரும் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துவதில்லை அதனால் மூன்றாண்டுகள் இருந்து இந்த தண்டனை தற்பொழுது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டது, அதோடு மகாராஷ்டிரா மாநிலம், தானே, சோலாப்பூர், கோலாப்பூர்,, நாக்பூர், கோண்டியா மற்றும் சத்தீஸ்காரிலும் இப்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் உள்ள 12,000 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். இப்படி நாடு முழுவதும் ஆங்காங்கே புதிய வாகன விபத்து திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது, உண்மையில் இந்த திருத்தச் சட்டம் வாகன ஓட்டுனர்களுக்கு எதிரானதா அதன் உண்மையான சிறப்பு அம்சம் என்ன என்பதை இதில் பார்க்கலாம்!


பி என் எஸ் 106 (2) என்று கூறப்படுகின்ற பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி ஓட்டுநர் விபத்தில் ஒருவரை அடித்துவிட்டு காவல்துறைக்கும் தெரிவிக்காமல் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கும் அனுமதிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றால் மட்டுமே அவர் மீது இந்த சட்டம் பாயும் என்றும் பத்து வருடங்கள் தண்டனை உடன் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு குற்றம் இல்லாமல் எதிர்பாராத வகையில் ஓட்டுநர் ஒரு நபரை அடித்து விபத்து ஏற்படுத்தினால் சம்பவம் நடந்த உடனே காவல்துறை அதிகாரிக்கோ அல்லது மாஜஸ்டிரிட்க்கோ புகார் அளித்தால் அவர் மீது குற்றம் சாட்டப்படாது என்று பிஎன்எஸ் சட்டம் கூறுகிறது. அதாவது ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் தப்பிக்க முயற்சிக்கும் ஓட்டுநர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஹிட் அண்ட் ரன் சந்தர்பங்களில் வாகனத்தின் எண், தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களை போலீசாரிடம் ஓட்டுநர் தெரிவித்தால் மட்டுமே போதுமானது அதற்குப் பிறகு காவல்துறையினர் தேவை ஏற்படும் போது விசாரணைக்கு அழைப்பார்கள் அப்பொழுது ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் எனவும் இச்சட்டம் தெரிவிக்கிறது. இந்த விளக்கங்களை மத்திய பிரதேசத்தின் மூத்த அதிகாரிகள் பல டிரக், பேருந்து மற்றும் பள்ளி பேருந்து நடத்துனர் சங்கங்களுடன் கூட்டம் நடத்தி வழங்கி உள்ளனர். இதனால் அங்கு போராட்டங்கள் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.


மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் கொண்டு வரப்படும் இதுபோன்ற சட்டங்கள் சில அரசியல் உள்ளோக்கத்துடன் எதிரக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News