Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக மக்களின் நலனை பார்க்காமல் ஆட்சி செய்யும் முதல்வர்! இதுதான் தமிழக முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்யும் லட்சணம்! எஸ்.ஜி.சூர்யா கண்டனம்!

தமிழக மக்களின் நலனை பார்க்காமல் ஆட்சி செய்யும் முதல்வர்! இதுதான் தமிழக முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்யும் லட்சணம்! எஸ்.ஜி.சூர்யா கண்டனம்!
X

SushmithaBy : Sushmitha

  |  26 Jan 2024 6:37 PM IST

நியூஸ்7 என்ற தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வந்த நேசபிரபுவை அடையாளம் தெரியாத கும்பல் அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து, பாஜக மாநில செயலாளர் சூர்யா விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். .

அதில், திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான கடைகள் குறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாளர் நேசபிரபு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அவரை அடையாளம் தெரியாத கும்பல் அறிவால் மூலம் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு செயல்படும் அவலத்தை எடுத்துக்காட்டுகிறது! செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது வேதனையிலும் உச்சம், இன்னும் தமிழகத்தின் முதல்வர் நாம்தான் என்ற ஞாபகம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் போல் கண்டனம் தெரிவிப்பது தமிழக முதல்வர் எந்த லட்சணத்தில் தமிழகத்தை ஆட்சி செய்கிறார் என அப்பட்டமாக காட்டியுள்ளது!

எதிலும் செயல்படாத முதல்வர் மக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு துறையை தன்னைப் போலவே செயல்படாமல் வைத்துள்ளார். மத்திய அரசை எதிர்ப்பது பிரிவினை அரசியலை வளர்ப்பது என அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் தமிழக மக்கள் நலனை பார்க்காமல் ஆட்சி செய்வது உதயசூரியனின் அஸ்தமத்தை காட்டுகிறது என்று எஸ் ஜி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News