Kathir News
Begin typing your search above and press return to search.

கமல் ரஜினியிடமும் ஆதரவு கேட்போம்! வானதி சீனிவாசன் பதில்!

கமல் ரஜினியிடமும் ஆதரவு கேட்போம்! வானதி சீனிவாசன் பதில்!
X

SushmithaBy : Sushmitha

  |  29 Jan 2024 5:43 PM IST

தென் சென்னை வேளச்சேரியில் பாஜக அலுவலகம் திறப்பு விழாவில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்காக அனைவரிடமும் ஆதரவு கேட்போம் திரு ரஜினிகாந்த் அவர்கள் திரு கமலஹாசன் அவர்கள் ஏன் உங்களிடம் கூட நாங்கள் ஆதரவு கேட்போம் அதை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரது விருப்பம்! முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தைரியமாக எதிர்கொள்மா? என்ற வகையில் பத்திரிகையாளர் தரப்பில் கேள்வி முன் வைக்கப்பட்ட பொழுது நாங்கள் இத்தனை வருடமாக கட்சி நடத்தி வருகிறோம், ஒரு தேர்தலை கூட நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறவில்லை!

மக்களிடம் ஒவ்வொரு முறையும் வேலை செய்து வருகிறோம் சேவையாற்றி வருகிறோம் மக்கள் கொடுக்கும் வாக்குகளை வாங்கி வருகிறோம், எங்கள் ஆதரவை நாங்கள் பலப்படுத்திக் கொண்டே வருகிறோம் அதனால் பிஜேபிக்கு எந்த தேர்தலை பார்த்து பயம் இல்லை என்று கூறினார்.

Source : News18 தமிழ்நாடு

Next Story
கதிர் தொகுப்பு
Trending News