Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக டி. கே. எஸ். இளங்கோவன் கூறியதை பொய் என்று நிரூபித்த பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா!

திமுக டி. கே. எஸ். இளங்கோவன் கூறியதை பொய் என்று நிரூபித்த பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா!
X

SushmithaBy : Sushmitha

  |  31 Jan 2024 7:20 AM IST

தனியார் தொலைக்காட்சியில் I.N.D.I.A VS N.D.A கூட்டணி : நிதீஷ் குமார் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது அந்த விவாத நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா திமுக அமைப்புச் செயலாளரான டி கே எஸ் இளங்கோவன் முன்வைத்த தவறை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார்.


அதாவது திமுக அமைப்புச் செயலாளர் டி கே எஸ் இளங்கோவன், திடீரென்று கர்பூரி தாக்கூர் மீது பாசம் வந்து அவர் ஜன சங்கத்திற்கு எதிரி தான் ஆனால் அவர் மீது பாசம் வந்து அவருக்கு ஒரு விருதும் கொடுத்தார்கள், எனவே பீகார் தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதை நம்பி அதனால் நிதிஷுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி தற்போது நிதிஸை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா கர்பூரி தாக்கூரைப் பற்றி மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதைக் கண்டேன், ஏனெனில் 1967 இல், எங்கள் ஜனசங்க எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கர்பூரி தாக்கூர் பீகார் துணை முதல்வராக ஆனார், 1972 மற்றும் 1977 இல் அவர் முதலமைச்சரானார். ஜனசங்க எம்எல்ஏக்களுடன் தேர்தல். பாஜகவில் இணைந்து ஜனதா கட்சி தொடங்கப்பட்டது, அவர் சொல்வது தவறு, ஏன் அவர்கள் காங்கிரஸுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள், ஒருபோதும் பாஜகவுக்கு எதிரானவர்கள் அல்ல, உண்மையில், பாஜகவுடன் பணியாற்றியவர்கள் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், அதை நான் திருத்த விரும்புகிறேன்.


கர்பூரி தாக்கூர் பாஜகவுக்கு எதிராக இருந்தால் எங்களுடன் மூன்று முறை கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி திமுக அமைப்புச் செயலாளர் டி கே எஸ் இளங்கோவளுக்கு பதிலடி கொடுத்தார்.

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News