இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி ஏன் தொடர வேண்டும்.. நீதிபதியின் காரசார கேள்வி..
By : Bharathi Latha
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு, அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். கிரிமினல் வழக்கில் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் இருந்தால் கடைசி தர அரசு ஊழியர் கூட பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் என நீதிபதி கூறுகிறார். “அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, சிறைக்குள் இருக்கும் போது, இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார்.
அமைச்சர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். உடல்நலக் காரணங்களுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட முந்தைய ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் 2023 அக்டோபரில் அமைச்சரவையில் நீடிப்பதைக் கருத்தில் கொண்டு தள்ளுபடி செய்ததாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இருப்பினும், மனுதாரர் இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடர்வதால், அந்தப் பிரச்சினையைப் பொருத்தவரை இப்போதும் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நீதிபதி வெங்கடேஷ் கூறினார்.
இதற்கு பதிலளித்த சுந்தரம் கூறும் போது, ED விசாரணையை கணிசமாக முடித்து, அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்துவிட்டதால், மனுதாரர் இப்போது ஜாமீன் கோருகிறார். அமைச்சரவையில் தொடரும் மனுதாரரின் வாதத்தை இந்த நிலையிலும் அவருக்கு எதிராக முன்வைத்தால், “உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் ஜாமீன் பெறுவது கடினமாகிவிடும்,” என்றார்.
Input & Image courtesy: News