Kathir News
Begin typing your search above and press return to search.

துரைமுருகன் வீட்டு கதவை அமலாக்கத்துறை விரைவில் தட்டும்! மணல் கொள்ளை விவகாரம்!

துரைமுருகன் வீட்டு கதவை அமலாக்கத்துறை விரைவில் தட்டும்! மணல் கொள்ளை விவகாரம்!
X

SushmithaBy : Sushmitha

  |  5 Feb 2024 1:52 AM GMT

2024 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் தமிழகத்தில் மறுமலர்ச்சி வரவேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இருந்து நடைப்பயணம் செய்து வருகிறார். இவரது நடை பயணம் ராமநாதபுரத்தில் தொடங்கி தென் தமிழக முடிக்கப்பட்டு தற்போது வேலூரை அடைந்துள்ளது.

நேற்றைய தினம் வேலூர் காட்பாடியில் மக்கள் மத்தியில் பாத யாத்திரையில் பேசிய அண்ணாமலையை பார்க்க திரளான கூட்டங்கள் கூடியிருந்ததும் அண்ணாமலைக்கு அப்பகுதி மக்கள் கொடுத்த வரவேற்பும் பிரம்மாண்டமாக இருந்தது இதனை அடுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,

கடந்த 2019 ஆம் ஆண்டு, வேலூர் பாராளுமன்றத் தேர்தல் தேதி மட்டும், பணப்பட்டுவாடா காரணமாக மாற்றி வைக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பான வழக்கில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் பெயர் டி.துரைமுருகன் ஆனால், திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த்தின் தந்தை பெயர் துரைமுருகன், அதனால் இருவரும் வேறு வேறு என்று வாதிட்டார். பெயரின் முதல் எழுத்தை வைத்து மாறுவேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். திமுக ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் மணல் கொள்ளை மூலமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 4,730 கோடி ரூபாய். இந்த மணல் கொள்ளையடித்தவர்களின் 136 கோடி ரூபாய் சொத்தை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. விரைவில் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் வீட்டுக்கும் அமலாக்கத் துறை வரும் என பதிவிட்டுள்ளார். இது துரைமுருகன் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Source : Asianet news Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News