மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் நலதிட்டதிற்கு கருணாநிதி அவர்களின் பெயரா! அண்ணாமலை கண்டனம்!
By : Sushmitha
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் தற்பொழுது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் ஆட்சி புரிந்து வரும் திமுக தொடர்ச்சியாக தமிழகத்தின் எந்த பகுதியில் எந்த ஒரு நலத்திட்டம் தொடங்கப்பட்டாலும் அதனை கருணாநிதி அவர்களின் பெயரையே சூட்டி வருகிறது என்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், நேற்று மாலை பயணம், சூரிய பகவான் வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில், மற்றும் புகழ்பெற்ற காங்கேயநல்லூர் முருகன் கோவில் அமைந்திருக்கும் அற்புதமான சட்டமன்ற தொகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகுசிறப்பாக நடந்தேறியது. கடந்த ஆண்டு மே மாதம், 365 கோடி மதிப்பிலான காட்பாடி ரயில் சந்திப்பு மறுசீரமைப்பு திட்டத்தை நமது பிரதமர் திரு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
சுமார் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ரயில்வே நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடித்தபின்பும் இந்த ரயில் நிலையம் காட்பாடி ரயில் நிலையம் என்றே அழைக்கப்படும். திமுகவினரைப் போல, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படுவதற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்படாது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மதுவால் வரும் வருமானம் வேண்டாம் என்று, தீவிர மதுவிலக்கைப் பின்பற்றியவர், குடும்ப அரசியலை வெறுத்தவர், தனக்கு பின் தனது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வராமல் பார்த்துக் கொண்டவர், ஊழல் செய்யாதவர், அவரது வளர்ப்பு மகன், அரசு மருத்துவராக ஓய்வு பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணா! ஆனால், அண்ணா அவர்களது பெயர் சொல்லும் கட்சிகளின் தலைவர்களோ, தங்களுக்குப் பிறகு தங்கள் வாரிசு என குடும்ப அரசியலை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுகிறார்கள். இன்று மது ஆலைகளை நடத்துபவர்களே திமுகவினர்தான் என விமர்சனம் செய்துள்ளார்.