Kathir News
Begin typing your search above and press return to search.

எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அக்கறை! முதவரானால் மறதியா? அண்ணாமலை சாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அக்கறை! முதவரானால் மறதியா? அண்ணாமலை சாடல்!

SushmithaBy : Sushmitha

  |  9 Feb 2024 1:33 AM GMT

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் எண் 65 மற்றும் 66 ஐ நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசே கண்டிக்கும் வகையில் தனது எஸ்க் பக்கத்தில்,

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் இதுவரை, நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய, திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, சத்துணவுத் திட்டத்திலும், பொது விநியோகத்திலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை விட்டதை, தான் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிட்டு, தென்னை விவசாயிகள் நலன் குறித்து சிறிதும் அக்கறையின்றி இருக்கிறார்.

விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்து, சிறையில் அடைக்க முடிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதியைக் குறைத்து, தமிழக விவசாயிகள் பலனடையும் வண்ணம், நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதைத் தடுப்பது எது என்று திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, தென்னை விவசாயம் செழிக்க, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News