கனவும் நிஜமும்! சமூக வலைதள பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக!
By : Sushmitha
நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ளதாக கூறப்படுகிற நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பணிகளில் ஒவ்வொரு கட்சியும் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்பொழுது இருந்தே பாஜக சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்து விட்டது.
அதாவது கனவு - நிஜம் என்ற பெயரில் தமிழக பாஜக சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. முதலில் கனவு என்ற தலைப்பில் அயோத்தியில் ராமருக்கான கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் நிஜம் என்பதில் பிரதமர் மோடியின் படத்துடன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதும் பகவான் ஸ்ரீ ராமர் அயோத்திக்கு வந்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக கனவாக இருந்த நாடு முழுவதும் ஒரே அரசியலமைப்பு ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நிஜமாகியது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களின் அதிகபட்ச இருப்பு - கனவு, லோக்சபா, சட்டசபைகளில் அதிக பெண்கள் பங்கேற்பு - நிஜம் என இப்படி மத்திய அரசு அமல்படுத்திய ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் அதனால் கனவாக இருந்தது நிஜ உருவை எடுத்துள்ளது என்பது குறித்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது பாஜக!
Source : Dinamalar