Kathir News
Begin typing your search above and press return to search.

கச்சத்தீவு தாரை வார்த்து கொடுத்து திருந்தாத திமுக! எஸ்.ஜி. சூர்யா கண்டனம்!

கச்சத்தீவு தாரை வார்த்து கொடுத்து திருந்தாத திமுக! எஸ்.ஜி. சூர்யா கண்டனம்!
X

SushmithaBy : Sushmitha

  |  11 Feb 2024 8:12 AM IST

ஸ்பெயினில் தனது சுற்றுலா பயணங்களை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி உள்ள முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற பிப்ரவரி 11 அதாவது நாளை ராமேஸ்வரத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் நடைபெற உள்ளதாக திமுக தரப்பில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தேச விரோத தி.மு.க அரசு!

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்த திருந்தாத தி.மு.க-வின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் கடிதத்தில் 243 மீனவர்கள் கைது என எந்த ஒரு விஷயமும் தெரியாமல் எப்பொழுதும் காகிதத்தை பார்த்து படிப்பது போல் எழுதியுள்ளது வருத்தமளிக்கிறது.

இன்று தி.மு.க-வின் தமிழக மீனவர்களுக்கான போராட்ட அறிவிப்பும் அதே போல தான், கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக இந்திய மீனவர்களே 3,137 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் தி.மு.க அறிவிப்பில் 3,076 தமிழக மீனவர்கள் கைது என தங்கள் சொந்த அரசியலுக்காக பொய் பரப்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 3,385 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு, 06/02/2024 மீன்வளத்துறை அமைச்சக அறிவிப்பின்படி 266 இந்திய மீனவர்கள் அதில் 41 பேர் மட்டுமே தமிழகத்தை சார்ந்தவர்கள் என்ற உண்மையை மறைத்து முரசொலி முட்டாள்கள் பொய் கூறி தமிழக மக்களை முட்டாளாக்கின்றனர்.

மீனவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பது தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் மட்டுமே.மீனவர்கள் மீதும் நாட்டு மக்கள் மீதும் என்றும் அக்கறை கொண்டுள்ள பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக மக்கள் விரோத தி.மு.க அரசு வாக்கு அரசியலுக்காக செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. 2024 தேர்தலே தி.மு.க-விற்கு இறுதியானதாக அமையும் என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News