Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வர் பொறுப்பு மக்களுக்கு உழைப்பதற்காக, போதைப் பொருள் வியாபாரத்திற்காக அல்ல - அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் பொறுப்பு மக்களுக்கு உழைப்பதற்காக, போதைப் பொருள் வியாபாரத்திற்காக அல்ல - அண்ணாமலை கண்டனம்!
X

SushmithaBy : Sushmitha

  |  1 March 2024 6:45 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுப்பட்டதில் சூடோ பெட்ரின் என்கிற போதி பொருளை கைப்பற்றியது. மேலும் அதே குடோனில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்களுக்கும் தமிழகத்தின் திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமாக உள்ள ஜாபர் சாதிக்கும் தொடர்பு இருப்பதை அறிந்த அதிகாரிகள் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சம்மன் அனுப்பியதோடு தற்போது சீலும் வைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, திமுக நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரருமான ஜாபர் சாதிக் என்பவரும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.

குஜராத் கடல் பகுதியில், தமிழகப் படகு மூலம் எடுக்கப்படவிருந்த ₹1200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைப்பற்றியுள்ளது.

தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது, அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த பாலிமர் நியூஸ் ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம்தான், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திரு ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News