பாஜக அம்பலப்படுத்திய பிஜிஆர் ஊழல் நிரூபணம் - அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை!
By : Sushmitha
பிஜிஆர் எனர்ஜி நிறுவனம், திமுக உழல் குறித்து தமிழக பாஜக அம்பலப்படுத்தியது தற்போது நிரூபணம் ஆகி உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு எண்ணூர் அனல் மின் நிலையத்தில் மின்சார திட்டத்திற்காக லங்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் 2019-ல் சுற்றுச்சூழல் அனுமதி புதுப்பிக்கப்பட்டு பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ரூபாய் 4,472 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இருப்பினும் 2021 தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான கடிதத்தை ரத்து செய்வதாக கடிதம் அனுப்பியது, இது தொடர்பான வழக்கை பிஜிஆர் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வழக்கில் பிஜிஆர் நிறுவனத்தின் சார்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்!
இதனைத் தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பிஜிஆர் நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான குழு ஒப்பந்தம் வழங்கியது!
ஆனால், 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் கோபாலபுரம் குடும்பம், பிஜிஆர் நிறுவனம் மற்றும் முன்னாள் துறையற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் தொடர்பை தமிழக பாஜக அம்பலப்படுத்தியது!
மேலும் 2022 ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியமும் நிறுவனமும் பங்களிப்பிடையே சமரசம் செய்து கொண்டு 2022 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை புதுப்பித்தது. பிறகு 2023 தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தை தமிழக பாஜக வெளியிட்டது அதன் ஒப்பந்தத்தை புதுப்பித்து 15 மாதங்கள் ஆகியும் திட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் பிஜிஆர் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது!
2024 ஜனவரியில் தமிழக மின்சார வாரிய ஒப்பந்தம் பிஜிஆர் நிறுவனத்திற்கு சாத்தியமே இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. அதனால் கடனில் மூழ்கி இருந்த பிஜிஆருக்கு உயிர் கொடுக்க கோபாலபுர குடும்பம் செய்த முயற்சி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் முதல் சிறையில் அடைபட்டு இருப்பதால் தோல்வியுற்றது!
இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தப்படி பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பிஜிஆர் நிறுவனம் வழங்கிய ரூபாய் 128 கோடி வங்கி உத்திரவாதத்தை வேறு வழி இன்றி தமிழ்நாடு மின்சார வாரியம் கையகப்படுத்தியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மீண்டும் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஏன் துடித்தார் என்பதையாவது தமிழக மக்களுக்கு விளக்குவாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
Source : Dinamalar