தி.மு.க அரசின் சாதனைகள் இவைகள் தான்.. பட்டியலிட்டு கூறிய அண்ணாமலை..
By : Bharathi Latha
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பத்தில் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய ஆதரவாளர்களுக்காக பிரச்சாரங்களை தொடங்கி இருக்கிறார்கள். இதில் காரசாரமான விவாதங்களும் தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் வேணுகோபால் அவர்களை ஆதரித்த பிரச்சாரம் செய்து இருக்கிறார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, திமுக அரசு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று குறிப்பிட்ட பேசி இருக்கிறார்.
தி.மு.க., அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்த போது பேசுகையில், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை. அனைத்து விலைவாசிகளும் தற்பொழுது அதிகமாக உயர்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
சிப்காட் விவகாரத்தில் விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தான் பா.ஜ., அரசின் சாதனை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Input & Image courtesy: News