இந்தியாவை காப்பாற்றுவதற்கு முன்பு, தமிழகத்தை காப்பாற்றுங்கள்.. அண்ணாமலையின் அறிக்கை..
By : Bharathi Latha
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கியது. முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. தேர்தல் நடந்த முடிந்து இருந்தாலும் தேர்தல் அன்று நடைபெற்ற சம்பவம் தற்போது இன்று பரபரப்பை ஏற்படுத்துகிறது. தேர்தல் அன்று கடலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப் பட்டிருக்கிறார். குறிப்பாக அவர் முன் விரோதம் காரணமாக தான் இந்த ஒரு கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஒரு சூழ்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறும் பொழுது, "கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தேர்தலில் தங்களுடைய கூட்டணிக்கு வாக்கு அளிக்காத காரணத்தினால் திமுகவினரால் இந்த செயல் அரங்கேற்றி இருப்பதாக சில செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால் தற்போது வரை இவற்றுக்கு திமுக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது. இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News