மண்டி தொகுதி.. பா.ஜ.க வேட்பாளரானார் நடிகை கங்கனா ரனாவத் வெற்றி..
By : Bharathi Latha
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங் தோல்வியை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வடக்கு இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டியில் இருந்து நாடாளுமன்றத்தில் நுழைகிறார். இது தொடர்பாக செய்தி பேட்டிகளின் போது காங்கிரஸ் சார்பில் பேசிய விக்ரமாத்திய சிங், "மண்டி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத்தை நான் வாழ்த்துகிறேன்" என்று சிங் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
37 வயதான ரணாவத் ஒரு தீவிர மோடி ஆதரவாளர் மற்றும் சமீபத்தில் விமர்சகர்களால் பிரச்சாரகர் மற்றும் தேசியவாதி என்று கருதப்படும் படங்களில் காணப்பட்டார். முழுமையாக அவர் பாஜகவிற்கு தீவிரமாக தன்னுடைய ஆதரவை காட்டினார். அவருக்கு மக்கள் தங்களுடைய ஆதரவை தற்போது காட்டி இருக்கிறார்கள்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நரேந்திர மோடியின் பெயரால் தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டேன். அவரது நம்பகத்தன்மை மற்றும் அவரது உத்தரவாதம் மற்றும் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் விளைவாக நாங்கள் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News