சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மோசமாக படு தோல்வி அடையும்.. டிடிவி தினகரன் காரசார பேட்டி..
By : Bharathi Latha
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மற்றொரு அணியாக தான் செயல்பட்டார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். தஞ்சாவூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது டிடிவி தினகரன் இது பற்றி அவர் கூறுகையில், "மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.
கர்நாடக முதல்வர், துணை முதல்வரிடம், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்தின் நியாயங்களை எடுத்துக் கூறி, அணை கட்டக் கூடாது, நடுவர் மன்றத் தீர்ப்பின் படி மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என தமிழக அரசு அழுத்தம் கொடுத்து நீரை தமிழக மக்களுக்காக பெற்று தர வேண்டும். மேலும் அவர் கூறும் பொழுது, ஒரு சில சுயநலவாதிகள், பதவி வெறியர்கள் தங்களை முன்னின்று நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுகவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் கூட இதை கண்கூடாக நாம் பார்க்க முடிந்தது.
பண பலம், இரட்டை இலை இருந்தும் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. அதனால் அதிமுகவுக்கு 13 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி சரிந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு 'B' டீமாக இருந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 சதவீதம் வாக்கு பெற்றுள்ளோம். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் உறுதியாக ஆட்சி அமைக்கும். திமுக மோசமாக படு தோல்வி அடையும்" என்று டிடிவி தினகரன் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy:News