Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.கவின் வெற்றி நிரந்தரமானது அல்ல.. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நெத்தியடி பதில்..

தி.மு.கவின் வெற்றி நிரந்தரமானது அல்ல.. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நெத்தியடி பதில்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Jun 2024 5:48 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல. வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இது பற்றி கூறும் பொழுது, "கூட்டணிக்குள் ஈகோவிற்கு இடமில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலில் பா.ம.க போட்டியிட வேண்டும் என கூட்டணியில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.


பாமக வேட்பாளர் நின்றாலும் பாஜக கடுமையாக பாடுபடும். திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரமானது அல்ல. 2026 ஆம் ஆண்டு வரும் சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். அதற்கான அடித்தளத்தை தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டு இருக்கிறோம். கடுமையாக உழைக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் திமுகவில் 39 எம்.பிக்கள் இருந்தாலும் தமிழக பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துசொல்லும் ஒரே MP ஆக L.முருகன் உள்ளார். பிரதமர் தமிழகத்திற்கு எப்போது வருவார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அண்ணாமலை கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News