திறனற்ற தி.மு.க அரசின் நிர்வாகம்.. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதை மாத்திரை புழக்கம்..
By : Bharathi Latha
சென்னையில் உள்ள தண்டையாா் பேட்டையில் 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா். போலீசார் ரோந்து சென்ற பொழுது இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ரோந்து சென்ற போலீசார் அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த 4 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது பையில் 3,005 போதை மாத்திரைகளை இருப்பதை பாா்த்து அதனை பறிமுதல் செய்தனா்.
அந்த நான்கு பேரும் திருவொற்றியூா், காா்கில் நகரைச் சோ்ந்த காா்த்திக், மீஞ்சூரைச் சோ்ந்த மதன்குமாா், வள்ளுவா் நகரைச் சோ்ந்த அப்துல் கரீம், செங்குன்றம் கோமதி அம்மன் நகரைச் சோ்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு 4 பேரையும் போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். தமிழகத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தற்போது நாளுக்கு நாள் போதை பொருள் கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறை இதற்கு அடிமையாகி வருகிறார்கள்.
சென்னை முழுவதும் கடந்த 2 நாள்களில் போதைப் பொருள் கடத்தல், போதை மாத்திரை விற்பது போன்ற 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா, 4,184 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Input & Image courtesy:News