Kathir News
Begin typing your search above and press return to search.

கள்ளச்சாராயத்தால் மேலும் ஐந்து பேர் பலி..அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : அண்ணாமலை கண்டனம்!

கள்ளச்சாராயத்தால் மேலும் ஐந்து பேர் பலி..அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : அண்ணாமலை கண்டனம்!

SushmithaBy : Sushmitha

  |  19 Jun 2024 11:54 AM GMT

கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் பலியாகியுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது. மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு.மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு.மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு.முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Source : ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News