கள்ளச்சாராய விற்பனை.. ஒடுக்க இரும்பு கரம் தேவை.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆவேசம்..
By : Bharathi Latha
தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரணம் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் நீங்காத வடுவையும் ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினர் அனைவரும் சோக கடலில் மூழ்கி இருக்கிறார்கள். பல்வேறு தலைவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை, மரணம் மற்றும் அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பல்வேறு கண்டன கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் காங்கிரசும் தற்போது தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும் போது, "சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அதிகமானோர் கள்ளச்சாராயத்தால் பலியாகினர். ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 49க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும். இதற்கு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றால், அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது" என்று கூறினார்.
Input & Image courtesy: News