கள்ளச்சாராய மரணம்.. சி.பி.ஐ விசாரணை தேவை.. அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்..
By : Bharathi Latha
தற்போது கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணத்தின் காரணமாக 49க்கும் அதிகமான உயிர்கள் பறிபோகி இருக்கிறது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கண்டன கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார் இது குறித்த அவர் கூறும் பொழுது, "தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்" என அண்ணாமலை அவர்கள் அறிவித்து இருக்கிறார்.
அது மட்டும் கிடையாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கள்ளச்சாராய மரணம் குறித்து மத்திய பாஜக அரசின் மேலிடத்தின் கவனத்திற்கும் கொண்டு சேர்த்து இருக்கிறார். இது குறித்து அண்ணாமலை அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறும் போது, கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில், கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
காவல் துறையினருக்குத் தெரிந்தே, சட்டவிரோத மது விற்பனை நடைபெறுகிறது. எனவே, மாநில காவல் துறை மூலம் விசாரணை நடத்தினால், உண்மைகள் வெளிவராது. எனவே, CBI விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தன்னுடைய கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News