திரிணாமூல் காங்கிரஸை மக்கள் வெறுப்பது ஏன்? ஊழல் தான் காரணமா? மம்தா பானர்ஜி சோகம்..
By : Bharathi Latha
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது ஆட்சிக்கு வழிவகுத்த ஊழல் மற்றும் திறமையின்மைக்காக தனது கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜூன் 24 அன்று மாநிலச் செயலகத்தில் நடைபெற்ற நகராட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசும் போது, கொல்கத்தாவில் தற்போது மிக முக்கிய பிரச்சினையாக இருந்து வரும் நில ஆக்கிரமிப்பு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். குறிப்பாக இந்த நில ஆக்கிரமிப்பு விஷயத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டு இருப்பது மம்தா பானர்ஜியை சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
கொல்கத்தாவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஊக்குவித்ததற்காக தனது சொந்த கட்சி எம்.எல்.ஏ சுஜித் போஸ் மீது கோபப்பட்டு இருந்தார். நில ஆக்கிரமிப்பு பற்றி நான் பேசும் பொழுது மிகவும் வெட்கப்படுகிறேன். ஏனெனில் என் சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் இதில் ஈடுபட்டு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் கொல்கத்தாவில் தற்போது நில ஆக்கிரமிப்பு பிரச்சினை நாளுக்கு, நாள் பூதாகரமாக மாறி வருகிறது.
இதற்குப் பின்னணியில் இருக்கும் எம்.எல்.ஏ சுஜித் போஸ் தனது விருப்பப்படி அத்துமீறலை அனுமதித்து இருக்கிறார். நான் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை காட்டினால் நீங்கள் வெட்கப்பட வேண்டிய சூழல் வரும் என்று அவர் கடுமையாக தனது கட்சி எம்.எல்.ஏவை சாடி இருக்கிறார். "அப்பகுதியை ஆக்கிரமிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள்? பணத்தை எடுத்தது யார்?" என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் 121 உள்ளாட்சி அமைப்புகளில் 69 இல் பின்தங்கிய நிலையில், இந்தச் சந்திப்பு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே இந்த சந்திப்பு கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: Opindia News