மக்களவையில் உதயநிதிக்கு பாலபிஷேகம் செய்த திமுக எம்.பிக்கள்! கோபாலபுரத்தின் கொத்தடிமைகள்! அண்ணாமலை சாடல்!

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முன்னதாக கடந்த வருடங்களில் புதிய எம்.பிகள் பலர் தங்கள் தாயகத்தை போற்றியும், இஷ்ட தெய்வத்தை வழிபட்டும் பதவி பிரமாணத்தை மேற்கொண்டார்கள். ஆனால் தற்பொழுது தமிழகத்தைச் சேர்ந்த 24 தி.மு.க எம்.பிகள் மற்ற எம்.பிகளை விட ஒரு புதிய பெயரை முழக்கமிட்டு பதவி பிரமாணம் செய்துள்ளனர்.
அதாவது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் பதவி பிரமாணம் மேற்கொள்ளும் பொழுது "எங்கள் எதிர்கால உதயநிதி ஸ்டாலின் வாழ்க" என்று குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து சென்னை எம்.பி தயாநிதிமாறன் "தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க" எனவும், காஞ்சிபுரம் எம்.பி செல்வம் 'பெரியார் அண்ணா, கலைஞர், தலைவர் தளபதி வாழ்க! இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க' எனவும், அரக்கோணம் எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் 'தமிழ் வாழ்க, தலைவர் கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க" எனவும், சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணி வேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோரும் "கலைஞர் வாழ்க, எங்கள் முதல்வர் வாழ்க, நமது வருங்கால உதயநிதி வாழ்க" என்று உதயநிதியை குறிப்பிட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும் தஞ்சாவூர் எம்.பி முரசொலி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வர சாமி, ஈரோடு எம்.பி கே.இ.பிரகாஷ், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் ஆகியோர் "தமிழ் வாழ்க, திமுக வெற்றி பெறட்டும், தளபதி வாழ்க, எங்கள் வருங்காலம் உதயநிதி" என்று பதவி ஏற்றனர்.
இப்படி திமுக எம்.பிக்கள் பெரும்பாலானோர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறகு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் என்று குடும்ப அரசியலை குறிப்பிடும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்தி பதவி ஏற்றினர். ஆனால் தர்மபுரி திமுக எம்.பி ஏ.மணி, வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், நாமக்கல் எம்.பி ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் டி.ஆர்.பாலு, ஏ.ராஜா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய எம்.பிகள் பதவிப்பிரமாணம் மட்டுமே மேற்கொண்டனர். மற்றபடி வேறு எந்த வார்த்தைகளையும், வசனங்களையும் அவர்கள் கூறாததும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இப்படி திமுகவிற்கு உள்ளே சிலர் உதயநிதியின் பெயரை குறிப்பிட்டும் சிலர் எந்தவித வசனங்களையும் குறிப்பிடாமலும் பதவி ஏற்றுள்ளனர். இதன் மூலம் ஒரு சிலர் திமுகவின் குடும்ப அரசியலை ஏற்பதாகவும் ஒரு சிலர் இந்த குடும்ப அரசியலை ஏற்றுக்கொள்ளாத வகையிலும் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி பதவி பிரமாணம் ஏற்கும் பொழுது தமிழகத்தின் முதல்வராகவும் தற்போது கட்சியின் தலைவராகவும் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை கூறினால் கூட சரிதான், ஆனால் அமைச்சராக உள்ள உதயநிதியின் பெயரை ஏன் இவர்கள் குறிப்பிட வேண்டும், ஆக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் என்பதை தன் கட்சியின் நிர்வாகிகள் வாயிலே தெரிவிக்க வைத்து விட்டு பிறகு கட்சி ஒன்றிணைந்து இந்த முடிவு எடுத்ததாக உதயநிதியை திமுகவின் தலைவராக அமர்த்துவார்கள், இதுதான் குடும்ப அரசியல். மேலும் திமுக கட்சியில் உள்ளவர்கள் கோபாலபுரத்தின் குடும்பத்திற்கு அடிமைகள் மட்டும்தான் என கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் திமுகவின் எம்.பிகள் உதயநிதியின் பெயரை குறிப்பிட்டு பதவி ஏற்றது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது, அதற்கு அண்ணாமலை அவர்கள் அனைவரும் "கொத்தடிமைகள் கோபாலபுர கொத்தடிமைகள்" என விமர்சித்துள்ளார்.