Kathir News
Begin typing your search above and press return to search.

நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்திய காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு- என்ன செய்தார் ராகுல்?

நெருக்கடி நிலையை கொண்டு வந்தவர்களுக்கு அரசியல் சாசனம் மீதான தங்களின் பற்றை வெளிப்படுத்த உரிமை இல்லை என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்திய காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு- என்ன செய்தார் ராகுல்?

KarthigaBy : Karthiga

  |  27 Jun 2024 10:10 AM GMT

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தங்கள் கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி மக்களவைக்குள் நுழைந்தனர். பிரதமர் மோடி பதவியேற்ற போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்திப் பிடித்து கோஷமிட்டனர் . இந்நிலையில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் நினைவு நாளை ஒட்டி அவர்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது :-

1975-ஆம் ஆண்டு ஜூன் 24 மற்றும் 25 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய மாபெரும் மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக அப்போதைய காங்கிரஸ் அரசு அனைத்து ஜனநாயக தத்துவங்களையும் புறக்கணித்து நாட்டையே சிறையாக மாற்றியது. காங்கிரஸ் உடன் உடன்பாடு இல்லாதவர்களை துன்புறுத்தியது. நலிந்த பிரிவினரை குறி வைத்து பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டமைத்து விடப்பட்டன .

அந்த இரண்டு நாட்கள் எப்படி காங்கிரஸ் கட்சி அடிப்படை சுதந்திரத்தை தகர்த்து அரசியல் சாசனத்தை காலில் போட்டு மிதித்தது என்பதை நினைவு படுத்துகின்றது. அடையாள செயல்கள் மூலம் அரசியல் சாசனம் மீதான தங்களது வெறுப்பை அவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களது செயல்களை பார்த்ததால்தான் அவர்களை ஒவ்வொரு தடவையும் மக்கள் நிராகரித்து வருகிறார்கள். நெருக்கடி நிலையை கொண்டு வந்தவர்களுக்கு அரசியல் சாசனம் மீதான தங்களது பற்றை வெளிப்படுத்த உரிமை இல்லை.

அதே ஆட்கள் தான் 356-வது பிரிவை பயன்படுத்தி எத்தனையோ தடவை மாநில அரசுகளை கலைத்தனர். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக மசோதா கொண்டு வந்தனர்.கூட்டாட்சி முறையை அழித்தனர். அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மீறினர். நெருக்கடி நிலை திணிப்புக்கு காரணமான அதே மனநிலை இன்னும் அந்த கட்சியிடம் உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News