Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களவை சபாநாயகர் பதவி.. நடந்த உண்மையை மூடிமறைக்கும் காங்கிரஸ் கட்சி.. பா.ஜ.க வெளியிட்ட முக்கிய ஆதாரம்..

மக்களவை சபாநாயகர் பதவி.. நடந்த உண்மையை மூடிமறைக்கும் காங்கிரஸ் கட்சி.. பா.ஜ.க வெளியிட்ட முக்கிய ஆதாரம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Jun 2024 11:59 AM GMT

மக்களவை சபாநாயகர் பதவிக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இருவரும் சேர்ந்து தான் சுமூகமாக முறையில் மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பா.ஜ.கவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சபாநாயகர் நியமனத்தில் மோதல் ஏற்பட்டது. "இதில் நாடாளுமன்ற மரபுப்படி, துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வழங்கவேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கூறினார்.

பா.ஜ.க வெளியிட்ட அறிக்கை:

எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எம்.பி-ஆன ராகுலுக்கு பாஜக தற்போது தெளிவான விளக்கங்களை கொடுத்து இருக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா வெளியிட்டு அறிக்கையில் கூறும் பொழுது, "கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது தான் மக்களவை சபாநாயகர் பதவி ஆகும். ஆனால் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும்படி காங்கிரஸ் நிர்பந்தித்திருப்பதே தலைகுனிவாகும். இதில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதுதான் மரபு என்றும், அப்படி வழங்கினால் மட்டுமே சபாநாயகர் நியமனத்துக்கு ஆதரவு தருவோம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது வெட்கக்கேடானது.


அப்போது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது துணை சபாநாயகர்களாகப் பதவி வகித்த அனந்தசயனம் ஐயங்கார் (1952-56), சர்தார்ஹூக்கம் சிங் (1956-62), கிருஷ்ணமூர்த்தி ராவ் (1962-67) ஆகிய மூவரும் காங்கிரஸ் கட்சியினரே. அந்த காலகட்டத்தில் சபாநாயகர் பதவி வகித்தவர்களும் காங்கிரஸ்காரர்களே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்திலும் ரகுநாத்கேசவ் கதில்கார் என்கிற காங்கிரஸ் தலைவர்தான் துணை சபாநாயகராக பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இதே நிலைதான்:

அவ்வளவு ஏன்? காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி புரிந்து வரும் மாநிலங்களிலும், ஒரே கட்சியிலிருந்து தான் சபாநாயகரும் துணை சபாநாயகரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறோம். குறிப்பாக மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் பீமன் பானர்ஜி சபாநாயகர் என்றால், அதே கட்சியை சேர்ந்த ஆசிஷ் பானர்ஜி துணைசபாநாயகராக உள்ளார். தமிழக சட்டசபை சபாநாயகரான அப்பாவு, துணை சபாநாயகரான பிச்சாண்டி இருவரும் திமுக கட்சியினர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்" என்று பாஜக தெளிவான விளக்கத்தையும், பதிலையும் கொடுத்திருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News