Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு மதுபானத்தில் 'கிக் பத்தவில்லை':அமைச்சர் துரைமுருகனின் கேலிக்கூத்தான பேச்சு- பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் சம்பவத்தை திமுக அமைச்சர் துரைமுருகன் மிகவும் சாதாரணமாக கேலிக்கூத்தாக சட்டமன்றத்தில் பேசி கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு மதுபானத்தில் கிக் பத்தவில்லை:அமைச்சர் துரைமுருகனின் கேலிக்கூத்தான பேச்சு- பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

KarthigaBy : Karthiga

  |  30 Jun 2024 2:00 PM GMT

அரசு மதுபானத்தில் போதை கிடைக்கவில்லை. 'கிக் வேண்டும்' என்பதற்காக கள்ளச்சாராயத்தினை குடிக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். அப்படி என்றால் அரசு மதுபானம் தரமற்றதாக இருக்கிறதா என்று குடிமகன்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு மதுபானத்தில் கிக் பத்தவில்லை அதனால் தான் கள்ளச்சாராயத்தை தேடி ஓடுகிறார்கள் .அரசு மதுபானம் சாஃப்ட் ட்ரிங் போல இருக்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். வேலை செய்த களைப்பிலும் உடல் அசதியைப் போக்கிக் கொள்வதற்காகவும் மதுபானத்தை நாடுகின்றார்கள் என்றெல்லாம் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். இது அவரின் பொறுப்பற்ற தனத்தை தெளிவாகக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு காவல் நிலையங்களும் இல்லை, நீதிமன்றங்களும் இல்லை, காவலர்களும் பணியமர்த்தப்படவில்லை. அவரவர் தானாகவே தான் திருந்தி கொள்ள வேண்டும் என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார் .அவர் கூற்றுப்படி தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்கள் தொகைக்கேற்ப காவலர்களும் இல்லை, காவல் நிலையங்களும் இல்லை நீதிமன்றங்களும் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

சட்டமன்றத்தில் எப்பொழுதுமே காமெடியாகப் பேசி அதிர்வலையை கிளப்புவது மட்டுமே துரமுருகனின் வேலையாக இருக்குமே தவிர வேறு எதுவும் நடவடிக்கை அவர் எடுத்தார் போல் இதுவரை தெரியவில்லை. அரசு விற்பனை செய்யும் மதுபானமே போதையைக் கொடுக்கவில்லை என்று குடிமகன்கள் நினைக்கும் அளவிற்கு இருந்தால் எத்தனை குடிமகன்கள் தமிழகத்தில் பல்கி பெருகி இருப்பார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. போதைக்கு அடிமையாக இருக்கும் குடிமகன்களை அதிலிருந்து மீட்டெடுப்பது ஒரு நல்ல அரசின் வேலையாக இருக்குமா? இல்லை போதை பத்தவில்லை என்று கள்ளச்சாராயத்தை நாடுகிறார்கள் என்று அதை மடைமாற்றி பேசுவது நல்ல அரசிற்கு அழகாக இருக்குமா? இவற்றையெல்லாம் கேட்கும்போதே திமுக அரசின் அவல நிலை நமக்குத் தெரிகிறது.

போதை மீட்பு மறுவாழ்வு மையங்களை திறப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இதுவரை அதுபோன்ற நல்ல விஷயங்கள் எதுவும் நடந்தேறவில்லை. அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை என்று கூறுவது பெரிய காமெடியாகவும் சாதனையாகவும் நினைத்து துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த கேலி பேச்சுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடிமகன்கள் பெருகி நிற்கும் நிலையில் அவர்களை அதிலிருந்து மீட்டு எடுத்து நல்வழி காட்டுவது அரசின் கடமையா? இல்லை சட்டமன்றத்தில் கேலிக்கூத்துக்கான பேச்சுகளை பேசுவது அமைச்சர்களுக்கு பெருமையா?

செங்கல்பட்டு, மரக்காணம், கள்ளக்குறிச்சி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் சோக சம்பவத்தை. இதற்கெல்லாம் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? பொது மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? பொறுப்பெற்ற திமுக அரசினால் இன்னும் எத்தனை இளம் விதவைகள் உருவாக காத்திருக்கிறார்களோ ? திமுக அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை சோக சம்பவங்கள் ஈடேற காத்திருக்கிறதோ! திமுக அரசு தான் இதற்கு எல்லாம் தீர்வளிக்க வேண்டும்.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News