Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்கள் குறித்து தவறாக பேசிய ராகுல் காந்தி: கொந்தளித்த பாஜக எம்.பி.க்கள்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்துக்களைப் பற்றி பேசி இருப்பது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. அது மொத்த இந்து சமுதாயத்தையும் அவமதிப்பதாக உள்ளது.

இந்துக்கள் குறித்து தவறாக பேசிய ராகுல் காந்தி: கொந்தளித்த பாஜக எம்.பி.க்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  2 July 2024 5:02 PM IST

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தை மொத்த பாஜகவையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமித்ஷா முதல் அண்ணாமலை வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக எம்.பிக்கள் பயங்கரமாக கோபத்தில் கொந்தளித்தனர் . அதெப்படி அப்படி பேசலாம் என்று அங்கே அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியே ஒருகட்டத்தில் கோபத்துடன் எழுந்து ராகுல் காந்திக்கு பதில் அளித்தார். அமித்ஷாவும் கடுமையான பதிலடி கொடுத்தார். இப்போது அண்ணாமலையும் பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுல்காந்தி இன்று பேசுகையில், "இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். இந்துக்கள் இந்துக்கள் என்று 24 மணி நேரமும் கூறிக் கொண்டிருப்பவர்கள் வன்முறையை கோருகிறார்கள் என்று இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசினார் .

இதைக் கேட்டு சபாநாயகர் உட்பட அனைவருமே எதிர் கருத்து தெரிவித்தனர்.ராகுல் காந்தி பேசும் போதே கொந்தளித்து, இடைமறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று காட்டமாக கூறினார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல்காந்திக்கு எழுந்து நின்று கடுமையான பதிலடி கொடுத்தார்.அமித் ஷா பேசும் போது, "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

அண்ணாமலையும் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எப்பொழுதும் போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மை நிலையை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோல் இருந்தது. இன்று இந்திய கூட்டணி சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வழியை வெகுதூரம் கொண்டு சென்றுள்ளது. ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News