வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு பாராளுமன்றத்தில் சவுக்கடி கொடுத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..
By : Bharathi Latha
திருமாவளவன் கூறியது என்ன?
லோக்சபாவில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் பேசினார். குறிப்பாக அவர் பேசும் போது, "அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47-ல் நாடு முழுவதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, மது ஒழிப்பை பற்றி கண்டு கொள்வதே கிடையாது. குறிப்பாக இந்தியாவில் இளைய தலைமுறை இந்த போதைப் பொருளால் பாழாகி வருவதை எண்ணி வேதனை அடைகிறேன். மத்திய அரசுக்கு இந்த வேதனை இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. குறிப்பிட்ட மாநிலங்களில் போதைப் பொருள் புழக்கம் மட்டுமின்றி, இது நாடு முழுவதும் தாராளமாக கிடைக்கின்றன. கூடவே கள்ளச் சாராயமும், காய்ச்சி விற்கப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்" என்று அவர் லோக் சபாவில் பேசியிருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி:
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உண்மை நிகழ்வுகளை தெளிவாக விளக்கி இருக்கிறார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறும் பொழுது, "தேசிய அளவில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் அவர்கள் வலியுறுத்துவதை வரவேற்கிறேன். ஆனால், திருமாவளவன் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக தான் தமிழகத்தை ஆள்கிறது. அங்கே தான், கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர்.
லோக்சபாவுக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு அறிவுரை வழங்குங்கள். போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது" என்று சரியான விளக்கத்தை அளித்து இருந்தார். உண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியபடி, தமிழகத்தில் தான் அதிகமாக கள்ளச்சாராயம் மரணங்கள், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக ஆட்சியில் அதிகமாக நடந்து இருக்கிறது.
கள்ளச்சாராய மரணங்கள்:
கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 2023-ஆம் ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில், கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். இப்படி உயிரிழப்பு நடந்த மாவட்டங்களில் மட்டும் அதிகமான நடவடிக்கைகளை எடுத்து விட்டு தாங்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்று அரசு மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. ஆனால் உண்மையில் கள்ளச்சாராய விற்பனை தமிழகம் முழுவதும் அதிகரித்து தான் இருக்கிறது. இப்படி தமிழகத்தில் நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை முதலில் தடுத்து நிறுத்துங்கள். பிறகு மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கலாம் திருமாவளவன் அவர்களே என நெட்டிசன்கள் நேரடியாகவே சமூக வலைதளங்களில் அவரை குறிப்பிட்டு பேசி வருகிறார்கள்.
Input & Image courtesy: News