திமுகவின் அழுத்தப் பிடிக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கிறாரா விஜய் ? ஏன் இந்த திடீர் மாற்றம்?
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் போதைப் பொருளுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் திடீரென்று திமுகவுக்கு ஆதரவாக பேசி வருவது போல இருப்பது நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : Karthiga
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) தலைவருமான விஜய், 28 ஜூன் 2024 அன்று, சமீபத்திய 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைக்கு உரையாற்றிய விஜய், எதிர்மறையான தாக்கங்களைத் தவிர்க்கவும், போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
"எந்த விலையிலும் உங்கள் அடையாளத்தை இழக்காதீர்கள் . தமிழகத்தில் சமீப காலமாக , இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது . ஒரு தந்தை என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் இந்தச் சூழலைப் பார்த்து நான் பயப்படுகிறேன். போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க முடியாத ஆளும் அரசாங்கத்தை நான் இங்கு குற்றஞ்சாட்டவில்லை. சில நேரங்களில் நாம் முதலில் நம் வாழ்க்கையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் . சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
தற்காலிக இன்பங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழிகளில் மாணவர்களை வழிநடத்தி, போதைப்பொருள் இல்லாத இளைஞர்களை வளர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டை காட்டினார். "தற்காலிக இன்பங்களை வேண்டாம் என்று சொல்லுங்கள் , போதைப்பொருட்களை வேண்டாம் என்று சொல்லுங்கள் " என்று அவர் வலியுறுத்தினார். இருப்பினும், 3 ஜூலை 2024 அன்று நடந்த நிகழ்வில், விஜய் நீட் பற்றிப் பேசினார். மேலும் மத்திய அரசை எதிர்ப்பது போலவும் பேசினார் .
சில நாட்களுக்கு முன்பு , மற்றொரு விழாவில் , தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறித்து விஜய் கேள்வி எழுப்பினார். குறிப்பாக திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேலையில் திடீரென்று மத்திய அரசுக்கு எதிராக அவர் பேசியிருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் திரையுலக நட்சத்திரங்களை தி.மு.க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், திமுக வழியில் விஜய் செல்வதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடியாக குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது .
விஜய்யின் பின்னணியை , குறிப்பாக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் இருப்பிடத்தை பற்றி காண்போம். விஜய் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் 1 இல் வசிக்கிறார்.கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தை விக்கிப்பீடியா வரையறுக்கிறது .அதிக அலைக் கோட்டிலிருந்து (HTL) 500மீ வரையிலான கடலோர நிலம் மற்றும் அலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட சிற்றோடைகள், குளங்கள், முகத்துவாரங்கள், காயல் மற்றும் ஆறுகளின் கரையோரங்களில் 100மீ . இந்த எல்லைக்கு உட்பட்டவை கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் கீழ் வருகிறது. இந்த விதிமுறைகள் கடலோரப் பகுதிகளைக் கொண்ட மாநிலங்களின் அரசாங்கங்களால் முன்வைக்கப்படுகின்றன .விஜய்யின் வீடு கடற்கரையில் இருந்து சுமார் 200 மீ தொலைவில் (அல்லது அதற்கும் குறைவாக) இருப்பதாக கூறப்படுகிறது .
தீயணைப்புத் துறை, சி.எம்.டி.ஏ., சுற்றுச்சூழல் துறை, சர்வேயர், நகரமைப்புத் துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக இந்த வீடு தொடர்பான ஆவணங்களை இழுத்ததாகக் கூறப்படுகிறது . சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு , அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும், கட்டமைப்பை " பகுப்பாய்வு செய்யவும் " விரும்பியதாகக் கூறப்படுகிறது. பகுதியை இடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . விஜய்யின் வீடு இருக்கும் இடத்தைப் பொறுத்தவரை , பிரச்சனைகள் அதிகம். இதையெல்லாம் பார்க்கும்போது , இந்தப் பிரச்சனையைத் தடுக்க விஜய் திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கவும், நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் எழுப்பவும் செய்திருக்கலாம் என்பது போலத் தெரிகிறது. திமுகவின் அழுத்தப்பிடியில் சிக்கிக்கொண்டு விஜய் மாட்டி தவிக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.