Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பை பறித்த தமிழக அரசின் புதிய அரசாணை!

உடற்கல்வி ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பை பறித்த தமிழக அரசின் புதிய அரசாணை!
X

KarthigaBy : Karthiga

  |  6 July 2024 4:33 PM GMT

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசாணையைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் "சுமார் 250 முதல் 400 பள்ளி மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பதாக மாற்றி கடந்த ஜூலை 2, 2024 அன்று அரசாணை பிறப்பித்திருக்கிறது திமுக அரசு.

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு புதிய நியமனங்கள் செய்வதைக் குறைக்கும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான திமுக அரசின் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் உடற்கல்வியையும் விளையாட்டுத் திறனையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் நாடகத்துக்காக தமிழ்நாடு கல்விக் கொள்கை குழு என்ற பெயரில் திமுக அமைத்த குழுவின் அறிக்கையை திமுக அரசின் முதலமைச்சரோ அமைச்சர்களோ ஒருவர் கூட படித்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

வெறும் விளம்பரத்துக்காக ஒரு குழுவிற்கு இரண்டு ஆண்டுகள் பொதுமக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. புதிய அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பு இந்த அரசாணைகள் மூலம் பறிபோயிருக்கிறது. மேலும் பெருகிவரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்து மாணவர்களை ஓரளவுக்கு காப்பாற்றி வருவது பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தான்.

கஞ்சா விற்பனைக்குத் தடையாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை தடுப்பதற்காகவே இது போன்ற வினோதமான அரசாணையை திமுக அரசு பிறப்பித்திருப்பதாக எண்ண வேண்டியுள்ளது.உடனடியாக ஜூலை இரண்டாம் தேதி இட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்பு போலவே 250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தையே தொடர வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News