Kathir News
Begin typing your search above and press return to search.

ஜூன் மாதத்தில் மட்டும் மூன்று கொலை! பொம்மை முதல்வர் சட்ட ஒழுங்கை காப்பாரா?

ஜூன் மாதத்தில் மட்டும் மூன்று கொலை! பொம்மை முதல்வர் சட்ட ஒழுங்கை காப்பாரா?
X

SushmithaBy : Sushmitha

  |  7 July 2024 4:40 PM GMT

தமிழகத்தில் பி.எஸ்.பி கட்சியின் மாநிலத் தலைவர் சென்னையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் மீளாத நிலையில், தமிழகத்தில் மற்றுமொரு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது நேற்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் இருக்கும் பொழுது வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது கொலையானது திட்டமிட்டு நடைபெற்றதாகவும், மேலும் 2015, 2023 மற்றும் 2024 ஜனவரி என நடந்த மூன்று கொலைகளின் தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங்கிங் கொலை சம்பவம் நடந்துள்ளது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதுமட்டுமின்றி 2015 இல் ஏற்பட்ட ஒரு கொலை சம்பவத்திற்கு பிறகு சரியாக திமுகவின் ஆட்சி காலத்தில் அதற்கான பழிவாங்கல் கொலை நடந்ததும், அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவமும் நடந்துள்ளதும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது என எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட வருகிறது.


இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வந்த பாமகவை சேர்ந்த நிர்வாகியான சிவசங்கர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் அறிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் கடலூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கு முன்னதாக சேலம் தாதகாபப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரான ஷண்முகத்தை கடந்த மூன்றாம் தேதி மாரியம்மன் கோவில் தெருவில் மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்வதது. இது தொடர்பான வழக்கு விசாரணையை காவல்துறை மேற்கொண்டதில், 55 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாருக்கும், அதிமுக பிரமுகரான ஷண்முகத்திற்கும் இடையே மாரியம்மன் கோவில் டிரஸ்ட்டி தலைவர் பதவி பெறுவதிலும், சாலை ஒப்பந்த பணி எடுப்பதிலும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


அதுமட்டுமின்றி சதீஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக ஷண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த காரணத்தினால் சதீஷ்குமாரின் கூட்டாளிகள் சண்முகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் போலீசார் சதீஷ்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதோடு திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமிக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதை கண்டறிந்து அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.


இப்படி இந்த மாத தொடக்கத்திலிருந்து மட்டும் மூன்று அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்றிலும் திமுகவிற்கான தொடர்பு உள்ளது. ஆகவே முதல்வர் பதவியேற்கும் பொழுது சட்ட ஒழுங்கை பாதுகாப்பேன் என்று கூறி பதவியேற்றதன் லட்சணம் தான் இதுவா இன்னும் ஏன் அவர் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News