Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக வேட்பாளரை நோக்கி கேள்வி கணைகள்: சாமானிய மனிதனின் சரமாரியான கேள்விகள்..

திமுக வேட்பாளரை நோக்கி கேள்வி கணைகள்: சாமானிய மனிதனின் சரமாரியான கேள்விகள்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 July 2024 4:10 PM GMT

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இருந்த நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனையடுத்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டிக்கு தொகுதிக்கு வரும் 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்ததால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 3 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர். பரப்புரை நாளையுடன் நிறைவு பெற உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த சாமானிய இளைஞன் ஒருவன் திமுக வேட்பாளரை நோக்கி சரமாரியான கேள்வியை எழுப்பி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


குறிப்பாக அந்த வீடியோவில் சாமானிய இளைஞன் திமுக வேட்பாளரை நோக்கி கேட்கும் கேள்விகள் என்னவென்றால், எப்பொழுது தமிழகத்தில் மதுவை ஒழிப்பீர்கள்? அதை சொல்லுங்கள் முதலில் என்று கேட்கிறார். அதற்கு திமுக வேட்பாளர் கூறும் பொழுது, முதலில் மத்திய அரசிடம் போய் கேளுங்கள், குஜராத்திலும் மது பிரச்சனை இருக்கிறது என்று கூறி மழுப்பி இருக்கிறார். பிறகு மீண்டும் அந்த இளைஞன், ஸ்டாலின் ஐயா தான் கூறினார் தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் அப்படின்னு, அப்போ எப்போ ஒழிப்பீங்க சொல்லுங்க? என்ற கேள்விக்கு கூட பதில் சொல்ல தெரியாமல் திமுக வேட்பாளர் திணறிய வீடியோவை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News