திமுகவின் போலி தகவலை அம்பலப்படுத்திய பாஜக..! பொய்களைப் பரப்பிய திமுக ஐடி விங்..!
By : Sushmitha
கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநிலத் தலைவர் சென்னை பெரம்பூர் அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு அருகில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட, தாக்குதலை தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களையும் வெட்டியுள்ளது.இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் செய்வதற்குள் தப்பிச் சென்றுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அவரது குடும்பத்தினர், அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வி.பொன்னை பாலு, கே.மணிவண்ணன், கே.திருவேங்கடம், டி. ராமு, ஜே.சந்தோஷ், எஸ்.திருமலை, ஜி.அருள் மற்றும் டி.செல்வராஜ் ஆகியோர் கொலையாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் டி.செல்வராஜ் என்பவர் திருநின்றவூர் பாஜக மண்டல தலைவராக இருந்துள்ளார் என்று திமுகவின் ஆதரவு இணையதளவாசி மற்றும் பத்திரிகையாளரான வரவனை செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத், திருநின்றவூர் பாஜக எஸ்.சி விங் மண்டலத் தலைவர் குட்டிமணி என்ற மணிகண்டன், படத்தில் குறிப்பிட்டுள்ள செல்வராஜ் எனும் இந்த நபர் கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. தங்களது இயலாமையை மறைக்க திமுக கொத்தடிமைகள் இஷ்டம் போல பொய் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்! என்று திமுகவின் வரவனை செந்தில் பதிவிட்ட பதிவிற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், என் பெயர் குட்டி (ஏ) மணிகண்டன். திருநின்றவூர் பாஜக எஸ்.சி அணி தலைவர். திமுகவினரின் போலி செய்தியை நம்ப வேண்டாம்!!
போலி செய்தி பதிவிட்டு கலவரத்தை நடத்தி யாரையோ காப்பாற்ற முயற்சிக்கும் "வரவணை செந்தில்" எனும் இவனை கைது செய்தால் ஆம்ஸ்டராங் கொலை பற்றி துப்பு கிடைக்கும் என்று பரபரக்க தகவலை தெரிவித்தார்.
இதற்கிடையில் ஆர்ம்ஸ்டராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அருள் என்பவர் திமுகவைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் திமுகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி நாசரை குற்றவாளி அருள் கௌரவிப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருள், திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருடனும், திமுகவுடனும் அவருக்குள்ள தொடர்பை அம்பலப்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் நடக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கு பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காட்ட முயற்சித்து வருகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த குற்றங்கள் அனைத்திற்கும் திமுக அல்லது அறிவாலயத்தின் அதிகாரத்தில் நடைபெறுவது அம்பலமாகி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்து குற்றம் சாட்டப்பட்ட அருள் திமுக கட்சியை சேர்ந்தவர். ஆனால் இதற்கு முன்பாக பாஜக மீது பழி போடும் வகையிலான தகவல்கள் போலியாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது என்று பாஜக ஆதரவு சமூக வலைதள பக்கங்களில் திமுகவின் போலி பதிவிற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
Source : The Commune