Kathir News
Begin typing your search above and press return to search.

போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, திமுக ஆட்சியில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கதறிய சாட்டை துரைமுருகன்..!

போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, திமுக ஆட்சியில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கதறிய சாட்டை துரைமுருகன்..!
X

SushmithaBy : Sushmitha

  |  12 July 2024 3:15 PM GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூப் பர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்ததற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது பாரதிய நியாய சந்ஹிதா மற்றும் SC&ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 196 (1), 192, 353, 111 (1) (2) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க ஒரு பக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திருச்சி நீதிமன்ற முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு சாட்டை துரைமுருகன் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலில் செல்ல தேவையில்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எழுதிய பாடலை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவர்கள் மேடையில் பாடினார் என்பதற்காக அவரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அத்தோடு நில்லாமல், அந்தப் பாடலில் இடம் பெற்ற வார்த்தைக்காக, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், அதே வார்த்தையைப் பலமுறை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போதெல்லாம் தவறாகத் தெரியாதது, தற்போது மட்டும் எப்படித் தவறானது என்பதை, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாவது, தமிழக காவல்துறை ஆலோசித்திருக்கவேண்டும்.

தினமும் கொலை, கொள்ளை என, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தத்தளித்து வரும் தமிழகத்தை, சீரான பாதையில் கொண்டு செல்ல எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைத்தளங்களிலும், பொதுமேடைகளிலும் திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்.

பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசினார் என்று சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை, தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதோ, பட்டியல் சமுதாய மக்கள் பிரதிநிதி ஒருவரை, பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீதோ, என்ன நடவடிக்கை எடுத்தது?

போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பட்டியல் சமூக மக்களைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

உண்மையாகவே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என்று கூறிக்கொள்ளும் அவர், சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்திய அவரது தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா? என்று சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், என் மீது பதினோரு வழக்குகளைப் போட்டு இந்த அரசு என்னை முடக்க பார்த்தது. நீதிமன்றத்தில், நாங்கள் 14 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்பதையும், இது அப்பட்டமான பொய் வழக்கு என்பதையும், என் மீது எஸ்.சி எஸ்.டி சட்டத்தை போட்டு இந்த திமுக அரசு முடக்க நினைக்கிறது என்பதையும் வாதங்களாக முன் வைத்தோம். நான் பாடிய பாடல் ஆனது அதிமுக 31 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வந்தது.

அவற்றை மேற்கோள் காட்டி மட்டுமே பாடினேன். அதன் மூலமாக பட்டியல் சமூகத்தை இழிவு படுத்துவதாக கூறப்படுவது அப்பட்டமான பொய்! மேலும் நான் பாடியதில் குறிப்பிட்ட வார்த்தையானது ஒரு இழிவான சொல் என்பது எனக்கு சத்தியமாக தெரியாது. அந்த வார்த்தையை நான் பயன்படுத்தியதற்காகவே என் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் நீதிபதி இந்த வழக்கு செல்லாது எனக் கூறி தள்ளுபடி செய்தார் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி தனக்கு எந்த ஒரு சம்மன்னும் கொடுக்கப்படவில்லை, குற்றாலத்தில் நான் தங்கி இருந்த பொழுது திடீரென காவலர்கள் வந்து என்னை கைது செய்தார்கள். என் செல்போனை பறித்துக் கொண்டு, என் காரிலே என்னை அழைத்து வந்தனர். அப்போது திட்டமிடப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எனக்கும் ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த அரசாங்கம் என்னை கொலை செய்யப் பார்க்கிறது. திமுக ஆட்சியில் எனக்கு பாதுகாப்பு இல்லை, அதனால் நீதிமன்றம் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News