கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நூறு ரூபாய் நினைவு நாணயம்...மோடி அரசு அனுமதி!
By : Sushmitha
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக அரசு கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட முன்வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சகம் ஏற்றுள்ளது.
யார் இந்த கருணாநிதி?
தட்சிணாமூர்த்தியாக பிறந்த கருணாநிதி சி.என்.அண்ணாதுரையின் பேச்சால் திமுகவில் இணைந்து பிறகு அண்ணாதுரைக்கு அடுத்து திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். இதிலிருந்து திமுக தொடர்ந்து கருணாநிதியின் குடும்பம் வசமே இருந்து வருகிறது. மேலும் திமுக ஒரு வம்ச கட்சியாகவும் மாறியது. கருணாநிதி இந்துக்கள் மற்றும் இந்து மதம் தொடர்பான பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை எப்பொழுதுமே வெளியிட்டுள்ளார். அதாவது 2002 "இந்துக்களை திருடர்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டார். இதற்கு பெருமளவில் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, இந்துக்களை திருடர்கள் என்று கூறியதற்கு பின்னால் "இதயத்தை திருடுபவர்கள்" என்ற அர்த்தம் உள்ளது என சமாளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் 2007 ஆம் ஆண்டு சேது சமுத்திரம் திட்டத்தின் ஏற்பட்ட பிரச்சனையில் "யார் இந்த ராமன்? எந்த பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்!! இந்த பாலத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்றால் அவர் எப்பொழுது இந்த பாலத்தை கட்டினார்? அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?" என இராமன் குறித்து அவதூறான கருத்துக்களை முன்வைத்தார். அதுமட்டுமின்றி சிறுகதைகள் பலவற்றை கருணாநிதி எழுதியுள்ளார், அவற்றின் இந்து தெய்வங்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அந்த கதாபாத்திரங்களை பெரும்பாலும் பாலியல் வக்ரத்துடனே சித்தரித்து எழுதி இருப்பார்.
மேலும் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரை பல இடங்களில் கேலி செய்து கருணாநிதி பேசியுள்ளார். அதோடு கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் "பெருந்தலைவர்கள்" என்று அழைக்க வேண்டுமென ஆணையிட்டார். ஆனால் இந்த ஆணையானது எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்யப்பட்டது. முன்னதாக காமராஜரை கேலி செய்யும் வகையில் பல கார்ட்டூன்கள் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஒப்புதல்:
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு முத்தமிழ் கலைஞர் டாக்டர்.மு.கருணாநிதி என்ற நினைவு நாணயத்தை வெளியிட மத்திய அரசுக்கு கோரிக்கையை முன்வைத்தது. மேலும் இந்த நாணயமானது கருணாநிதி நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பில் மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டது. ஆனால் இதில் ஏற்பட்ட நடைமுறை தாமதத்தால் குறிப்பிட்ட தேதியில் நாணயம் வெளியிடப்படவில்லை.
மேலும் தற்பொழுது இதன் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துள்ளதால் நாணயத்திற்கான ஒப்புதலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளார். கருணாநிதியின் நினைவு நாணயத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் "தமிழ் வெல்லும்" என்ற வார்த்தையையும், டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி என்று பொறிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முன்னாள் முதல்வர்கள் காமராஜ், சி.என்.அண்ணாதுரை, அதிமுக நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Source : The Commune