Kathir News
Begin typing your search above and press return to search.

தி க்ரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்.. தி.மு.கவிற்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்..

தி க்ரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்.. தி.மு.கவிற்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 July 2024 4:35 PM GMT

தமிழகத்தில் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்களா?என்று பார்த்தால், உடனே அதில் பாஜகவை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று திமுகவினர் தமிழகத்தில் ஒரு மாயை ஏற்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவில் இருப்பவர்களின் குற்ற பின்னணிகள் குறித்து தி க்ரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்டையும் வெளியிட்டுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுடனான சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறும் போது, "ஜனநாயகம் மெதுவாகத்தான் நகர செய்யும். தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் 5 ஆண்டுகள் கழித்து ஜனநாயகம் அவர்களை மாற்றிவிடும். நான் காவல்துறையில் இருந்தபோது சரி, தவறு என்ற அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடிந்தது. அரசியல் கட்சித் தலைவரான பிறகு கடந்த மூன்றாண்டுகள் கடினமாகத்தான் இருந்தது.


சராசரி மனிதர்களை போல, எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் இருக்கிறேன். சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா? என்று யோசித்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் போன்றவை வேண்டும். கோவையில் வெற்றி தள்ளி போயுள்ளது. தோல்வி என நினைக்க வேண்டாம்" என்றார். இதை நாம் ஒரு ஆன்மீக பயணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பைசா கூட வாக்காளர்களுக்கு பணம் தராமல், நேரடியாகவே மக்களை சந்தித்து, அவர்களின் வாக்குகளை பெற்று இருக்கிறோம், இனியும் பெற வேண்டும். கோவையில் இப்போது கிடைத்திருக்கக்கூடிய 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் நமக்கு மிக முக்கியமானது. இந்த வாக்குகள் நமக்கு பெருத்த நம்பிக்கையையே தந்து இருக்கிறது.


நிச்சயம் 2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் நிலையான ஒரு இடத்தை பெறும் என்று மக்கள் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும் பொழுது, குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பாஜக நீக்கி உள்ளது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்த தகவல்களை மாநில தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்ட தலைமையின் அதிகாரமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இதற்கான புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்த உள்ளது.


தி கிரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட் செல்போன் மூலம் வெளியிட்டு:

அதே நேரத்தில் திமுகவில் உள்ள குற்ற பின்னணி கொண்டவர்கள் குறித்த அறிக்கையை வெளியிடுகிறேன் என்று கூறிய அண்ணாமலை, தி கிரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்டை தனது செல்போன் மூலம் வெளியிட்டுள்ளார். இதில் சுமார் 112 பேர் முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களாக பட்டியலிடப் பட்டுள்ளனர். இந்த டாக்குமெண்ட் மொத்தம் 18 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை. இதில் திமுக பிரமுகர்களின் பெயர், புகைப்படம் மற்றும் தேதி உள்ளிட்டவை ஆதாரத்தோடு உள்ளது. இந்த அறிக்கையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட திமுகவினரை குறித்து விரிவாக அறிக்கை கூறுகிறது. போதைப் பொருள் கடத்தல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடையவர்கள், காவல்துறையினரை தாக்கியவர்கள், அரசியல் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், வணிகர்களிடம் பணம் பெற்றவர்கள் என்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் மொத்த பட்டியலும் உள்ளடக்கி இருக்கிறது. அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள இந்த தி க்ரைம் முன்னேற்றக் கழகம் என்ற டாக்குமெண்ட் தற்போது தமிழக அரசியலில் பேச்சுப்பொருளாக்கி இருக்கிறது.

Input & Image courtesy: Twitter Source

Next Story
கதிர் தொகுப்பு
Trending News