Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதி எவ்வளவு? பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அண்ணாமலை அறிக்கை..

தி.மு.க கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதி எவ்வளவு? பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அண்ணாமலை அறிக்கை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 July 2024 5:35 PM GMT

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதி எவ்வளவு? தற்போது பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து சமூகவலைதள பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் தாக்கலான பட்ஜெட்டில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும் மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா? ஏழை, எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழகம் என்ற பெயர் இடம் பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.


நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா? நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?


மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர்? முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News