Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை கேடி என்று விமர்சித்த தயாநிதி: பிரயோஜனம் இல்லாமல் போகும் திமுக ஆர்ப்பாட்டம்!!

பிரதமர் மோடியை கேடி என்று விமர்சித்த தயாநிதி: பிரயோஜனம் இல்லாமல் போகும் திமுக ஆர்ப்பாட்டம்!!
X

SushmithaBy : Sushmitha

  |  30 July 2024 2:36 AM GMT

தயாநிதிமாறனின் விமர்சனப் பேச்சு:

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு மறந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டின் பெயர் கூட இடம்பெறவில்லை என்பதை கண்டித்து திமுக சார்பில் நேற்று (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் எம்.பி தலைமை வகித்து மேடையில் பேசிய பொழுது, மோடி ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார், 400 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூறி 240 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளனர். அதுவும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசு நிதிஷ்குமார் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்யை கொடுத்துள்ளது மேலும் சந்திரபாபு நாயுடு அரசுக்கு 16,000 கோடி ரூபாய் கடனை வழங்குவதற்கான உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறது. இதன்மூலம் சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி ஆப்பு வைத்து விட்டார். அதனால் இந்த அரசு நிற்காது இதுதான் உண்மை! என்று மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யாதது போன்று பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையிலும் பேசி இருந்தார்.

நாராயணன் திருப்பதி பதிலடி:

இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘கேடி' என்று மோடியை சொல்கிறார் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். யார் கேடி? சட்ட விரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் இணைத்துகொண்டு சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி பல கோடி ரூபாய் அரசாங்கத்தின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் பிரதமரை கேடி என்று சொல்வது அயோக்கியத்தனம்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களை இது போன்று பேசியிருந்தால் தமிழக காவல் துறை அடுத்த நொடியே கைது செய்து சிறையிலடைத்திருக்கும். பிரதமர் குறித்து இந்த வார்த்தையை பிரயோகம் செய்தது குற்றச் செயல் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான குற்றம். மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களை தமிழக காவல்துறை அல்லது சென்னை மாநகர காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் உடனடியாக இந்த நபரை கைது செய்ய உத்தரவிட வேண்டும். பிரதமரை தவறாக பேசிய தயாநிதி மாறனை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, அவரை கைது செய்து சிறையிலடைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தயாநிதி மாறன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு:

அதே சமயத்தில், மத்திய பட்ஜெட் 2024-25 தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு

- ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூபாய் 6,362 கோடியை பெற்றுள்ளது.

- ஆறு வந்தே பாரத் ரயில்கள், 77 மாதிரி அம்ரித் ரயில்கள் நிலையங்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

- சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கோவை மெட்ரோ ரயில் திட்டம், தஞ்சாவூர் ஐடி தொழிற்பூங்கா உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வரி பகிர்வில் 94.95% அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் உதவி மானியங்களில் 157.58% அதிகரித்துள்ளது.

- தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக மற்றும் மேம்பாட்டிற்காக மட்டும் மத்திய அரசு 50,873.76 கோடி ஒதுக்கிட்டுள்ளது. அதுமட்டுமின்றி முத்ரா கடன் திட்டம் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் கால அளவு மற்றும் மதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டின் பயனாளிகள் அதிகமாக இருப்பதும் தமிழகத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரயோஜனமே இல்லை!

ஆனால் இவை அனைத்தையும் மறைத்து விட்டு மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை, மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், தமிழகத்தை நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம் என்று திமுக அரசு தன் கை காசை போட்டு வேலை பார்ப்பது போன்ற பாவனை செய்து வருவதாக அரசியல் விமர்சகர்களிடையே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி அரசு வழங்குகின்ற அனைத்து திட்டங்களையும் தமிழகத்திற்கு ஒரு புதிய பெயரை சூட்டி அதனை தமிழக அரசு வழங்குவதாக ஒரு பிம்பத்தையும் காட்டி வருகிறது இந்த திமுக அரசு! இவற்றின் முகத்திரைகளையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல பாஜக நிர்வாகிகள் ஆதாரத்தோடு நிரூபித்துள்ளனர். இதனால் எத்தனை முறை ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் மேடை போட்டு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டது, ஓட்டுக்காக மோடி பேசுகிறார் என்றெல்லாம் திமுக நிர்வாகிகள் பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News