Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு ஒதுக்கிய நிதியை களவாடல் செய்த கர்நாடகா காங்கிரஸ் அரசு : விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன் : பம்மிய ராகுல்!

எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு ஒதுக்கிய நிதியை களவாடல் செய்த கர்நாடகா காங்கிரஸ் அரசு : விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன் : பம்மிய ராகுல்!
X

SushmithaBy : Sushmitha

  |  3 Aug 2024 12:17 PM GMT

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து நாடாளுமன்ற அவையே கிடுகிடுத்துப் போகும் அளவிற்கு வாதங்கள் சூறாவளியாக பறந்து வருகிறது. அந்த வகையில் மத்திய பட்ஜெட்டில் சில மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை, அதனால் அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது என்று நிதி ஆயோக் கூட்டத்தை சில மாநில அரசுகள் புறக்கணித்தனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவும் கர்நாடகாவில் காங்கிரசும் இந்த கூட்டத்தை புறக்கணித்தது. இதற்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர்கள் இதுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட பல மடங்கு அதிகமான நிதி கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மத்திய பட்ஜெட்டிலும் அதிகமான நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் சரவெடியான பதில்களை முன் வைத்திருந்தனர்.

திமுக அரசை போன்றே கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் மத்திய பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டை முன்வைத்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது. இதனை அடுத்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் குறித்து தவறான தகவல்களை கர்நாடகா அரசு பரப்பி வருகிறது, அந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 2004 - 2014 ஆண்டு வரை மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி நடத்திய பொழுது கர்நாடகாவிற்கு ரூபாய் 81 ஆயிரத்து 791 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி நடத்திய கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கர்நாடகாவிற்கு ரூபாய் 2 லட்சத்து 95 ஆயிரத்தி 818 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவிற்கு மானியமாக 60,279 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் கர்நாடகாவிற்கு மானியமாக மட்டும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 955 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சரண்ஜித் சிங் சன்னி உட்பட பல காங்கிரஸ் எம்.பி'கள் பிரதமர் மோடி அரசு எஸ்.சி, எஸ்.டி மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கடுமையான கேள்விகளை முன் வைத்திருந்தனர்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா அரசிற்கு எஸ்.சி, எஸ்.டி துணைத்திட்ட நிதியில் இருந்து ரூபாய் 2,028 கோடி, 1,587 கோடி ரூபாய் மற்றும் 641 கோடி பழங்குடியினர் துணை திட்டத்திலிருந்து செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை, இதனை கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநில ஊடகமும் இந்த கேள்வியை எழுப்பியது

நான் கேட்க விரும்புகிறேன் மாண்புமிகு முன்னால் முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி அவர்களே, கர்நாடகாவில் உள்ள உங்கள் தலைவர்களிடம் எஸ்.சி, எஸ்.டி நிலைமைகளை பற்றி கேள்வி கேளுங்கள், இங்கு கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை!

கர்நாடகாவில் காங்கிரஸ்தான் ஆட்சி செய்கிறது, கர்நாடகா பற்றி இன்னொரு விஷயம்.... காங்கிரஸில் எஸ்.சி, எஸ்.டி பற்றிய பேசி எல்லா தலைவர்களும் இன்றைக்கே கர்நாடகாவிற்கு சென்று எஸ்.சி, எஸ்.டி வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி என்ன ஆனது என்று கேள்வி கேளுங்கள் இந்த நிதி அபகரிப்பு யாருக்கும் தெரியாமல் நடக்கிறது, அவர்களைக் கேள்வி கேட்காமல் இங்கே வந்து எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை! என்று நாடாளுமன்ற அவை மொத்தத்தையும் அதிர வைத்தார் நிர்மலா சீதாராமன், அவரின் இந்தக் கேள்விகள் காங்கிரஸ் தலைமையையும் ஆடிப் போக வைத்தது, ஏனென்றால் நிர்மலா சீதாராமன் இந்த கேள்விகளை முன் வைக்கும் பொழுது எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூட அவரின் பேச்சிற்கு செவி கொடுத்து கேட்டுக் பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News