Kathir News
Begin typing your search above and press return to search.

இண்டி கூட்டணி கட்சியினரை கதற விட்ட நிர்மலா சீதாராமன்: அதிர்ந்த பாராளுமன்றம்...

இண்டி கூட்டணி கட்சியினரை கதற விட்ட நிர்மலா சீதாராமன்: அதிர்ந்த பாராளுமன்றம்...
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Aug 2024 2:23 AM GMT

நடந்து முடிந்த நாடாளுமன்ற முழு பட்ஜெட் தாக்கலின் போது காங்கிரஸ் பாஜகவை பல்வேறு வகையில் குறை கூறியது. அதிலும் குறிப்பாக பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் அதில் இல்லை இது ஒரு தலை பட்சமான பட்ஜெட் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எதிர்க்கட்சியினரை தெறிக்கவிட்டு இருப்பார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் இதை விரைவாக பகிர்ந்து வருகிறார்கள்.


அந்த வகையில் அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசும் பொழுது, "காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு மாநிலங்களின் பெயர்களை அவர்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லையா? அப்படி நிதி ஒதுக்கவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? ஏனென்றால் அவர்கள் தான் அத்தகைய மாநிலத்தின் பெயர்களை தங்களுடைய பட்ஜெட்டில் அந்த காலத்தில் குறிப்பிடவில்லையே? என்று சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.


காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டை சுட்டிக் காட்டி இதில் எல்லா மாநிலங்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளார். 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். குறிப்பாக 2004-2005, 2005-2006, 2006-2007, 2007-2008 மற்றும் பல நிதியாண்டுக்கான பட்ஜெட் உரைகளில் ஆய்வு செய்கையில், 2004-2005 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை. அப்போதைய UPA ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களை நான் கேட்க விரும்புகிறேன். அந்த 17 மாநிலங்களுக்குப் பணம் செல்லவில்லையா? UPA அரசு நிதியுதவியை நிறுத்தினார்களா? அவர்கள் அதை நிறுத்தியிருந்தால், கேள்விகளை எழுப்ப அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது" என்று நிதியமைச்சர் பேசியுள்ளார். மேலும் நாட்டில் எந்த மாநிலத்திற்கும் நிதியுதவியை மத்திய அரசு மறுக்கவில்லை, நாங்கள் எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் காட்டவில்லை என தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News