Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக அரசின் அலட்சியப் போக்கால் பொருளாதார வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கி இருக்கும் தமிழகம் !

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக அரசின் அலட்சியப் போக்கால் பொருளாதார வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கி இருக்கும் தமிழகம் !
X

KarthigaBy : Karthiga

  |  11 Aug 2024 7:26 AM GMT

தமிழ்நாட்டின் பொருளாதர வளர்ச்சி 3.2% உள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் 9%, தெலுங்கானா 3.8% ,ராஜஸ்தான் 5.9%, மேற்கு வங்கம் 4.85 %, கேரளா 4.5% பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தேக்க நிலை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.டி மூலம் மாநில வருவாய் மகாராஷ்டிராவுக்கு 12.4% ஆகவும் உத்திர பிரதேசத்திற்கு 14.6 % ஆகவும் உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு மைனஸ் 11% ஆக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது.

தமிழக தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்கி வருகின்றனர். ஆனால் மாநிலத்தில் பொருளாதாரத்தை பெருக்குவதில் முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை. பெரிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். வங்கதேசத்தில் தொழில் முதலீடு செய்தவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News