கூட்டணி கட்சிக்கே பகீர் கிளம்பிய கார்த்தி சிதம்பரம்! பரபரப்பில் திமுக!
By : Sushmitha
பிரபல அரசியல் விமர்சகராகவும் யூடியூப்பராகவும் அறியப்பட்டு வந்த சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் சுமத்தப்பட்டது. சவுக்கு சங்கர் கைது செய்யப்படுவதற்கு முன்பு திமுகவின் ஆட்சியில் நடைபெற்று வருகின்ற ஊழல்,.திமுக அமைச்சர்கள் செய்கின்ற ஊழல் நடவடிக்கைகள் குறித்த சில தகவல்களை வெளியிட்டு அறிவாலயத்திற்கு அவ்வப்போது பகீர் கிளம்பி வந்தவர். இதனால் இவரது கைது உள்நோக்கம் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் சவுக்கு சங்கர் வதந்தி பரப்பி பொதுமக்களை போராட தூண்டியதாக, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், "சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்படுகின்ற வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. பொது அமைதிக்கு சவுக்கு சங்கர் குந்தகம் விளைவித்ததாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கான காரணங்கள் போலீஸ் உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. அதோடு சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவிற்கு தீவிரமானவையாக தெரியவில்லை, எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உள்நோக்கம் இருப்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக" தெரிவித்தனர்.
அதோடு வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாந்த் பரிந்துரையின் பெயரில் ஆட்சியர் ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி என் மீது புதிய வழக்குகள் பதியப்பட்டு தினமும் கைது செய்கின்றனர். இந்த கைதுகள் அனைத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் பொழுது கூறியிருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரம், அநாகரிகமாக யூடியூபில் சவுக்கு சங்கர் பேசியிருந்தாலும், அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் அரசின் முடிவை இன்னொரு முறை நீதிமன்றம் ரத்து செய்வது நடக்கும்! என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுகவின் கூட்டணி கட்சி எம்.பி இப்படி ஒரு கருத்தை தன சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது திமுக வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.